பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 என்னிடம் அளவளாவ வந்தார். அவர் உரையாடலால் அவர் பச்சையப்பர் கல்லூரியின் பழைய மாணவர் என்றறிந்து பெருமகிழ்வு எய்தினேன். அப்புறம் ஆங்காங் சிறப்புகளைக் கேட்டேன்; சொன்னார்கள். கேட்கக் கேட்க வியப்பாய் இருந்தது. ஆங்காங்கில் காலம் பொன்; பொற்காலம் என்பதறிந்தேன். ஆங்காங்கின் தலைமைச் சிறப்பு பணப் பரிமாற்றம் (Money Exchange) தான் என்பதறிந்தேன். நிமிடத்துக்கு நிமிடம் உலகச் சந்தை யில் பணமாறுதல்கள் ஏற்படும். அதைப் பயன்படுத்தித் தொலைபேசியிலேயே வாங்கி. விற்று வாணிபம் புரிவோம்; கமிஷன் பணமே செல்வம் என்றார்கள், பணச்சூதாட்டம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். சிறிது நேரம் சென்றதும் உங்கள் இளைய மகள் ?" எங்கே என்றேன், அவள் நேற்று முன் தினம்தான் சென்னைக்குப் போயுள்ளாள் என்றார். தனியாகவா ?" என்தேன், ஆம்' என்றார். வியந்தேன். எப்படி ?’ என்று குமதி மறைக்காடரை உற்று நோக்கினேன். இதற்கு - எங்களோடு அவள் வந்து பழகியிருக்கிறாள். விமானத்தில் ஏற்றி விட்டால் சிங்கப்பூரில் இறங்கி விடுவாள். அங்கே எங்கே போய் எப்படி சென்னை விமானத்தில் ஏற வேண்டும் என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். அதன்படி அவள் நடந்து கொள்வாள்நடந்து கொண்டாள். சென்னை சேர்ந்து தொலைபேசிச் செய்தியும் வந்து விட்டது" என்றார்கள். எனக்கு வியப் பாகவும் மகிழ்வாகவும் இருந்தது. திரு-திருமதி மறைக்காடர் குழந்தை போலத் தமிழ்க் குழந்தைகள் எல்லாம் தன்னம்பிக்கையும் திறமையும் உடைய குழந்தைகளாக வேண்டும் என்று அவாவினேன். திரு. மறைக்காடர் குடும்ப மாண்பில் வருங்காலத் தமிழ் இனத்தின் மாண்பே மலர் பொதி மணமாய் இருப்பதை உணர்ந்தேன்; உவந்தேன். அந்த உவகையிலேயே-நாளை ஆங்காங்கைப் பார்ப்போம் என்ற நினைப்பிலேயே-- கண்ணயர்ந்தேன்.