பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 பிள்ளை பி. ஏ. பட்டம் பெற்றவர். சென்னை அஞ்சல் துறையில் சூப்ரிண்டெண்டாக வேலை பார்த்தார். இவரியற்றிய 1800 ஆண்டுகட்கு முக்திய தமிழர் என்னும் ஆங்கில நூல் ஆராய்ச்சித் துறையிலே சிறப்புற்றது. ம ற் று ம் களவழி ந ற் ப து, கலிங்கத்துப் ப ர னி, வி. க் கி ர ம சோழனுலா முதலிய தமிழ் நூல்களை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்து இ ந் தி ய ப் புராதனக் &@ 8065&r’ (indian Antiquarry) grogojib sgååa, இதழில் வெளியிட்டர். சிலப்பதிகாரத்தைப்பற்றி-ஏன் ? - சீவகசிந்தாமணி யைப் பற்றிப் பேரும் கேள்விப் படாநிலையில், டாக்டர் உ. வே. சுவாமிநாத ஐயர் இருந்த காலத்தில், அந்நூல் களைப் பற்றியும் சங்க இலக்கியங்களைப் பற்றியும் ஐயருக்கு அறிவுறுத்தியவர் இக்கட்டுரையாளனின் முன்னோர்களுள் ஒருவராகிய சேலம் இராமசாமி முதலியார். அந்தச் சிலப்பதிகாரத்தில் இருக்கும் 30 காதைகளுள் ஒன்று ஊர் காண் காதை’. அக்காதை கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் மதுரை மாநகரைக் காணும் காட்சியைக் காட்டுகிறது. அக்காட்சியை விளக்கும் ஒவ்வோர் அடியும் சிறப்புடையதே; ஆயினும் இதுபற்றி இளங்கோ அடிகளார் கூறிய ஈரடிகள் எப்போதும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒரு காரணம் அந்த அடிகளைச் சிலம்புச் செல்வரின் மெய்ப்பாடுகள் நிறைந்த பேச்சுகளில் விளக்கமுடன் அடியேன் கேட்டதுதான் எனலாம். ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு வாய்திறங் தன்ன மதிலக வரைப்பு மேற்கண்ட ஈரடிகள் நெஞ்சையள்ளும் சிலப்பதிகார அடிகள். இந்த அடிகளை இப்போது பார்க்கும் போதும். படிக்கும் போதும் சேரநாட்டு இளங்கோ அடிகள் மதுரையை வருணித்த வருணணைக்குப் புரட்சித் தலைவர்