பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை ஆய்வே வாழ்வு; வாழ்வே ஆய்வு" எனத் தாம் கூறின் ஆய்வு மொழிக்குத் தாமே தக்கதோர் எடுத்துக்காட்டாக விளங்கியதோடு, தமிழ்ப்பணியைத் தம் தொழில், தொண்டு, தொழுகை என உயிர் மூச்சு உள்ளவரை கடைபிடித்து வாழ்ந்தவர் சிந்தனைச் செம்மல்" பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி அவர்கள். உலக உறவு வளர|மலர வேண்டுமானால், உலகைச் சுற்றி வரவேண்டும்; உலக மக்களைக் கண்டு மகிழ வேண்டும்; அவர்களுடைய உணர்வுகளை நேரில் அறிய வேண்டும் என்னும் வேட்கை கொண்ட பேராசிரியர் அவர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கிரீசு, சிங்கப்பூர், பிரான்சு, மலேசியா, ஜப்பான், ஜெர்டின், ஹாங்காங், ஹலாந்து போன்ற உலக நாடுகளுக்கும் பயணங்கள் மேற்கொண்டுள்ளார்கள். - தம் பயணங்கள் எல்லாம் தமிழர்க்குப் பாடங்கள் ஆக வேண்டும் என்னும் நல்லுணர்வோடு அவற்றை ஒற்றுமை ஒளி, கலைக்கதிர், விடுதலை, ஜூனியர் விகடன் போன்ற பல்வேறு இதழ்களில் வெளியிட்டு வந்தார்கள். அவற்றையெல்லாம் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்கினால், பெரும்பயன் தரும் என்னும் எண்ணத்தில், அவரே உருவாக்கிய அருள்வாழ்வுப் பதிப்பகத்தின் வழிச் னேம் தரும் சிந்தனைகள்' என்னும் பெயரில் இந்நூலை வெளியிடுகின்றோம். முதலில், இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைத் தம் இதழ்களில் வெளியிட்டுதவிய திருமதி சாந்தி