பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பொன்மனச் செம்மல்-ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்திச் சேர்த்த புதுப்புகழ், நன்றியுடன் என் நெஞ்சில் நிழலாடும். தலைவர் கலைஞர் பூம்புகாருக்குப் புதுப்புகழ் சேர்த்தார். மதுரை மீட்ட சுந்தரபாண்டியரோ . மாமதுரைக்கு மாநாட்டுப் புகழ் சேர்த்தார். பேரறிஞர் அண்ணாவோ தமிழகத் தலைநகருக்கே தனிப்புகழ் சேர்த் தார்; இருந்த போதும் - இறந்த போதும். இதெல்லாம் சரி, ஆங்காங் பற்றிய பயணக் கட்டுரை யில் இந்தச் சிலப்பதிகார மேற்கோள் விளக்கம் எல்லாம் ஏன்? என்று கேட்பீர்கள், ஒரே வரியில் பதில் சொல்லி விட்டு விளக்கம் செய்கிறேன். ஆங்காங்கை என்னால்இளங்கோ இலக்கியத்தில் தோய்ந்த என்னால்-வேறு சொற்களால் வருணிக்க முடியாது. காரணம் நான் தமிழன் , என் இதயம் எதையும் தமிழ்க் கண்கொண்டும் பார்க்கும் இதயம். மேலும் இலக்கியனுக்கு எதையும் தான் கற்ற இலக்கியத்தோடு பொருத்திப் பார்ப்பது - நினைத்துப் பார்ப்பது இயல்பு. அதுவே அழியாத் தமிழன்-இழியா இலக்கியத்தின் இமய வெற்றியும் ஆகும். காலங்கடந்தும் கருத்தைக் கவ்வுவதே கலையின்-கன்னித் தமிழின் வெற்றி! ஆங்காங் உலகிலேயே சிறந்த துறைமுகங்களுள் ஒன்று; ஆழ்கடல் துறைமுகங்களுள் ஒன்று இதன் சிறப்பைசிறப்பின் சிற்சில பகுதிகளை-நான் பார்த்தது சிலமணி நேரங்கள்தான். ஆனால், இப்பயணக் கட்டுரைக்கு ஆங்காங்கின் சிறப்புகளை-அதன் விவரங்களை அறிய பல்கலைக் கழகத்திலும் அமெரிக்க நூலகத்திலும் நான் படித்ததோ பலமணி நேரங்கள். காரணம் நாம் வாழும் ஊரிலேயே பல பகுதிகளை நாம் பார்த்திருக்க மாட்டோம் (அதுவும் சென்னை போன்ற நகரங்கட்கு இது மிகவும் பொருந்தும்); ஆனால், பயணக் கட்டுரைகளில் நாம் பார்த்ததை மட்டுமே எழுதினால் போதாது; நாம் கண்டதன்.கேட்டதன் அடிப்படையாகக் கற்பவர் நெஞ்சில்