பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ô{} செய்திகள் வந்து கொண்டிருப்பதை அறிவர். நேற்றும் (17-11-83) இன்றும் (18.12-83} கூட இந்து நாளிதழில் ஆங்காங்-சீனம் தொடர்பான செய்தி ஒன்று வந்திருப்ப தைப் பார்த்திருக்கக் கூடும். அதன்படி, ஆங்காங்கை பிரிட்டிஷ் காலனியாக்க சீனா உடன்பட்ட 99 ஆண்டு உடன்படிக்கை 1997ஆம் ஆண்டு முடிவடையப் போகிறது: அப்புறம் ஆங்காங்கின் நிலை யாது என்பதே கிழக்காசியா பற்றிய இன்றைய பெருங் கேள்விகளுள் ஒன்று. மெல்ல இது பற்றிய விளக்கமும் பொழுது புலர்ல்து போன்று ஏற். பட்டு வருகிறது. நேற்றைய 117-11-83) இன்றைய (18-11-83) இந்து நாளிதழ்களும் சீனா ஆங்காங்கை நேரடி யாகத் தன் ஆதிக்கத்தின் கீழ் (இப்போதைக்கேனும்:): வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிவிப்பதாகத் தெரிகிறது! இது குறித்துச் சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே அவ்வப்போது அடிக்கடி நடந்து வரும் பேச்சு வார்த்தைகள் பண்பும் பயனும் நிறைந்தனவாய் உள்ளன என்று உரைக்கப்படுகின்றன. ஆங்காங்கைச் சீனா தன் நாட் டில்{திபெத் போன்ற சில பகுதிகட்குப் பெயரிட்டிருப்பது Guirogy) 3& ortliffo 135urrà (Autonomous Region) அறிவிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அமெரிக்காவையும் திக்குமுக்காடச் செய்யும் வகையில் முன்னேறும் ஜப்பான் போன்ற தொலை கிழக்கு நாடுகள் தொட்டு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களின் முன்னேற்றங்களை எல்லாம் எளிதில் கண்டறியப் பயன் படும் வழி உலகின் கிழக்கிற்கும் மேற்கிற்கும் நுழைவாயி, லாகப் -புழைவாயிலாகப் பயன்படும் வகையில் ஆங்காங்கை ஒரு தலைமுறைக் காலத்திற்கேனும் தலைமை நாடாகிய (Mainland) சீனாவைப் போல அல்லாமல் சற்று நெளிவு சுளிவுடன் வைத்திருப்பதே ஆகும் என்பது சாதாரன அறிவுடையவர்கட்கே தெரியும்போது சாதனை கள் பல படைத்த சீனாவுக்கா தெரியாது?