பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6? சில நாட்கட்கு முன்பு வந்த தமிழ்நாட்டுச் செய்தி ஏடுகள் தமிழக அமைச்சர்- தலைமை அமைச்சர் தானோ? - தெரிவித்ததாக ஒரு சேதியை வெளியிட்டுள் ளன. அது சிங்கப்பூருக்கும் ஆங்காங்குக்கும் பொறியியல் வல்லுநர்களை அனுப்பி, பழங்காலத்தில் கரிகாலன் காடு கெடுத்து நாடாக்கியது போல', 'கடல் கெடுத்து நிலம்’ ஆக்கும் முயற்சிகளைக் கற்றுவரச் செய்வோம் என்ப தாகும். இதனால் ஆங்காங்கின் நிலப்பரப்பு இவ்வளவு என்று துல்லியமாகக் கூற இயலவில்லை: காரணம் கடல் துர்க்குவனே' என்று கரிகாலன் கூறியதைப் புற நானுாற்றுப்பாட்டு ஒலிப்பதிவு செய்து உரைப்பது போலத் தினம் தினம் திரைகடல் துர்க்கப்படுகிறது-சிறிது சிறிதாகவேனும் சிங்கப்பூரிலும் ஆங்காங்கிலும்! இனி ஆங்காங்கை என்னைப் போல் சில நாள்களில்நேரங்களில் -சில மணி நேரங்களில் பார்த்தவர்கட்கும்ஏன்? - பல காலம் அங்கிருந்தும் பார்த்தும் படித்தும் அறியாதவர்கட்கும் பயன்படும் வகையில் சில குறிப்பு களைத் தருதல்தகும். சீனாவின் தென் வாயிலில் சிறந்து விளங்குவது ஆங்காங், சற்றொப்ப பொட்டுப் பொட்டான 280 தீவு களைச் சுற்றிச் கொண்டிருக்கும் பகுதியே ஆங்காங். ஆங்காங்கிற்கு 90 மைல் வடக்கே சீனாவின் துறைமுக நகரம் காண்டோன் உள்ளது. ஏறத்தாழ 404 சதுரமைல் (1946சதுரமீட்டர் மொத்த பரப்புள்ளது ஆங்காங். ஆங்காங் தீவும் அதற்கடுத்துள்ள சிறு தீவுகளும் 29 சதுர மைல்கள் பரப்பின. முந்நீர் நாடாகிய (தீபகற்ப) சைனா வின் கொசுப் பகுதியாகிய (!) கெளலோன் பகுதியும் மணி அறுப்போர் தீவும் மூன்றே முக்கால் சதுரமைல் பரப்பின. புதிய நிலப்பகுதிகள் சற்றொப்ப 9.66 சதுர மைல்கள் உடையன. கெளலோன் தீபகற்பப் பகுதியில் ஏராளமான துறைமுக வசதிகள் உள்ளன. ஆங்காங்கின் தலைநகரம் விக்டோரியா, இங்கிருந்து- இங்குள்ள உச்சி