பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 யிலிருந்து பார்த்தால்-அதுவும் இரவு நேரத்தில் முகில் கூட்டங்கள் மூடி மறைக்கா நேரத்தில்-பார்த்தால், "ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு வாய் திறந்து நவமணி ஒளி வீசிய நற்காட்சி கிடைக்கும். ஆங்காங்கின் மக்கட் தொகை 1941-இல் 1,500,000; 1947இல் இந்திய நாடு விடுதலை பெற்ற ஆண்டில்’ 4,000,000. இந்த மக்கள் பெருக்கத்திற்கு மறைமுகக் காரணம் சீனாவில் ஏற்பட்ட புயல் வேக அரசியல்பொருளாதார மாறுதல்கள்தான் என்பர். தன் கையைத் தானே ஊன்றிக் கரணம் போட'த் தொடங்கிய ஆங்காங் சுண்டுவிரல் நாடு- எப்படி முன்னேறுகிறது என்பதற்குச் சிறந்த எடுத்து காட்டு: 1960-ல் 73% ஆக இருந்தது. உள்ளுர்ப் பொருள்கள் ஏற்றுமதி: இப்போது 0ேஆக உயர்ந்து விட்டது. காண்டோன், ஆங்காங் ஆகிய துறைமுக நகரங்கள் தென்சீனாவில் 1,216 மைல் (1957 கி.மீ.) தொலைவிற்குப் பாயும் ஹிசிசியாங் (சியாங்-ஆறு) ஆற்றுப் படுகைப் பகுதி யில் அமைந்துள்ளன. ஹிசிசியாங் வடசீனாவில் உள்ள ஆறுகள் சிலவற்றை நோக்கச் சிறிதாயினும் 173,000 ச.மைல் (448,000 ச.கி.மீ.) வண்டல் மண்டலத் தைக் கிளை ஆறுகளுடன் சேர்ந்து உருவாக்குகிறது. சுருங்கச் சொன்னால் - மேற்குறித்த வண்டல் மண்டலம் பார்வைக்கும் பயனுக்கும் நம் சோழ மண்டலத்தைநஞ்சை நிறைந்த தஞ்சையை-ஒத்ததாகும். இப்பகுதியே தமிழ் நாட்டுத் தஞ்சை, திருச்சி மாவட்டம் போல மக்கள் தொகை நிறைந்த பகுதி ஆகும். காரணம் வெளிப்படைமுப்போகம் முகிழ்க்கும் நிலவளப் பகுதி. இப்பகுதி மேற்படி ஆறு சில இடங்களில் 280 அடி ஆழம் கூடப் பெறுகிறது. அதிக அகலமான ஒரிடம் 1,120 அடி. மேற்கண்ட ஆற்றின் விரிந்துபரந்த வண்டல் பகுதி காவிரி நாடனைய க ழ விை நாடாக உள்ளது. நெல்லும் கரும்பும்,