பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 கனிகளும் காய்களும் நிறைய விளைகின்றன. இப் பகுதியில் மே, சூன் மாதங்கள் மழை மாதங்கள் ஆம் நமக்கு அப்போது கோடை காடுகளும் மலைகளும் நிறைந்த இந்தப் பகுதியில் மூங்கிலும் கற்பூரமும் ஏராளம். வளமார்ந்த இப்பகுதியில் மட்டும் 10,000,000 பேர் வாழ் கின்றனர். காண்டோனைத் தலைநகராகக் கொண்ட இம்மாவட்டத்தில் அயல்நாட்டு உள்நாட்டு வாணிபங் கட்குத் துணைபுரிவது ஹிசிசியாங் ஆறே ஆகும். கோடை மழை இப்பகுதியைக் கொழுக்கவும் செய்கிறது; கொடுமைக் குள்ளாக்கவும் செய்கிறது. இந்தப் பகுதியில் 17,18,19,20 ஆம் நூற்றாண்டுகளில் முறையே 29, 26, 36, 24 முறை வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ளன. ஆங்காங் பகுதி தொன்மையான பகுதி, எரிமலைத் தன்மையுடையது. 136, 00,000 லிருந்து 190,000,000 ஆண்டுகள் தொன்மையுடையது. இப்பகுதி திடுமென கடலிலிருந்து எழுந்ததாகும். ஆங்காங் பகுதியில் மிக உயர்ந்த மலையின் உச்சி 3,140 அடி (957 மீட்டர்கள்) செங்குத்தான மலைகள் நிறைந்துள்ள தீவு ஆங்காங். கடற்குகைகள் பாறைக் குகைகள். பெரிதும் மலைநிலமான ஆங்காங்கின் துறைமுக, தொழில், குடியிருப்புப் பகுதிகள் தெற்கேயும், வேளாண் மைப் பகுதி வடக்கேயும் உள்ளன. கிழக்காசியப் பகுதி சூறாவளிக்குப் (Typhoons) பேர் போனது. நாம் காணும் புயலினும் கொடுமையான இந்தச் சூறாவளிகள் அடிக்கடி ஆங்காங்கில் ஏற்படும். ஆங்காங்கின் தற்போதைய நிலப்பகுதி நம் கரிகாலன் கூறியதாகப் பழைய புறப்பாட்டு புகல்வது போல, மலை அகழ்ந்து கடல் தூர்த்தலால் உண்டாகியதே. 1958 லிருந்து இம்முயற்சி பெருஞ்செலவில்-பெருவிலையில் உருவாகி வருகிறது.