பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. ஆங்காங் நாட்டில் கி. பி. 11 ஆம் நூற்றாண்டு தொட்டுத் தொடர்ந்து இருக்கும் குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன; புதிய குடியிருப்புகளும் பூத்துள்ளன. பழைய குடியிருப்புகளைச் சுற்றிக் கோட்டை மதில்களும் அகழி களும் உள்ளன. வெள்ளப் பெருக்குக்கு அஞ்சி வீடுகள் உயரத்தில் உள்ளன. அடித்தளத்தை உயரமாக்க அகழ்ந்த நிலப்பகுதிகள் அழகிய குளங்கள் ஆக்கப்படுகின்றன! ஆங்காங்கில் பல்வேறு இனத்தவரின் மரபுகளைக் காட்டும் பல்வகைக் குடியிருப்புகள் உள்ளன. தோப்பும் குளமும் தொன்மைக் குடியிருப்புகளின் அடையாளங்கள். இக்குடியிருப்புகளில் வாழ்ந்த பழங்கால மக்கள் மலை களில் வாழும் காற்றும் (வளி), வெள்ளத் தெய்வங்களி லிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அரணாக இத்தோப்புகளைத் தோற்றுவித்தனர் என்பர். குளங்களில் உள்ள நீர், மீன் வளர்ப்பிற்கும் வேளாண்மைக்கும் பயன் படுத்தப்படுகின்றது. ஆங்காங் கோயில்களில் கடல் கடவுளர்கட்கும் இடம் உண்டு. ஆங்காங்கில் 90% மக்கள் சீனர்கள். சீனரல்லாத ஆங்காங் மக்களுள் பெரும்பாலோர் காமன் வெல்த் நாடுகள் (இந்தியா போன்றவை), அமெரிக்கா, போர்ச்சுகல், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள். 1973-இல் ஆங்காங்கிற்கு வந்து, போன மக்கள் 30,000 என்றும் அவர்கள் 10,000 படகுகளில் வந்தனர் என்றும் ஒரு கணக்கு உரைக்கின்றது. ஆங்காங்கின் பெருவளம் மீன்வளமே. மீன் ஏற்று மதியே இங்குப் பெரியதாக நடைபெறுகிறது. தைத்த ஆடைகள் தயாரிப்பதும் பொம்மைகள் செய்வதும் பெருந்தொழில். எலெக்ட்ரானிக் சாமான்கள் தயாரித் தலும் கட்டடங்கட்டலும் பழுது பார்த்தலுமாகிய தொழில்கள் வளர்ந்து வருகின்றன.