பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 ஆயிரங்கண்ணோன் அருங்கலச் செப்பு -1 சீனாவின் தெற்கு வாயிலாய் உள்ள ஆங்காங்கில் எண்பதுக்கு மேற்பட்ட இடங்கள் பார்த்தற்குரியன (Places of interest) orog) என்சைக்கிளோபீடியா பிரிட்டானிகா பட்டியல் செய்து நிலப்படத்துடன் (Mab) குறிக்கிறது. ஆனால், சீனாவுக்குச் செல்லுமுன் எங்கட்கு. இருந்த இரண்டே நாள்களில் நானும் டாக்டர் து. நடராசனும் டாக்டர் சீனிவாசனும் முதன் முதலாகப் பார்த்து மகிழ்ந்தவை சிலவே. டாக்டர் மு. நாகநாதனுக் குத்தான் இது இரண்டாம் முறை ஆயிற்றே! ஆங்காங்கில் யான் கண்ட காட்சிகளுள் மிகச் சிறந்தது. கடலின்கண் முத்து போல் சுடர்விடும் ஆங்காங்கின் கடல்துறைமுகக்-கப்பல் கூடத்தின் அழகுதான் நீலத்திரைக் கடலின் நித்திலமாய்-நித்திலக் குவியலாய்-விளங்கும் ஆங்காங்கைச் சுற்றிச் சுற்றி நிற்கும் சிறியதும் பெரியது மான கப்பல்களையும், ஆங்காங் தீவுக்குள் உயர்ந்தும் தாழ்ந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் மொய்த்திருக்கும் பல அடுக்குக் கோபுரங்கள் போன்ற மாளிகைகளையும் பார்க்கும் போது-பழந்தமிழ் இலக்கியங்களில் படிந்த என் கண்கட்கு- அந்நாளில் அருமைத் தமிழகத்தில் வாழ்ந்த வேந்தர்களும் வேளிருமே நினைவுக்கு வந்தார்கள். அவர்கட்குக் கடல் கடந்தும் வாழ்ந்த அக்கால மன்னர்கள் பெரியதும் சிறியதுமாக அனுப்பிய கப்பக் கப்பல்கள் என்ற தினைவே எழுந்தது.