பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 முழங்கு கடல் முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ. வளமுடையதாக இருந்த பூம்புகார் இப்படித்தான் இருந் திருக்குமோ என்ற கருத்தே என்னைக் கவ்வியது; என் நினைவுகளில் கவிந்தது. மேற்கண்ட காட்சியைக் காண அமைந்துள்ள இரு வழிகள் என் கண்களையும் கருத்தையும் பெரிதும் கவர்ந்தன. ஒன்று கடலுக்கடியில் செல்லும் கரவுப்பாதை. ஓரிடத்தில் கடலைத் தூர்த்துக் கட்டப்பட்டுள்ள இப் பாதை நெடியது; பெரியது; அகன்றது: அழகியது; தூய்மையானது. இரவு பகல் எந்நேரமும் ஒளிமயமாய் உள்ள இப்பாதை மேற்கே-அல்ல-கிழக்கேயும் வளர்ந்து வரும் அறிவியல்-பொறியியல்-ஆற்றலின் வெற்றி அடை யாளம். இரண்டாவதாக (இரண்டாந் தரமாக அல்ல) என்னைக் கவர்ந்தது கடற்சோலை (Ocean Park) என்றழைக்கப்படும் மலைமேல் உள்ள கடற்காட்சியே ஆகும்! இதைக் காண பெரியதொரு (பழனி போன்ற) மலை மீது கயிற்றுக் கூண்டுகள் (Cable Cars) வழியாகச் செல்ல வேண்டும். இக்காட்சியை இப்போது சிங்கப்பூரிலும் காணலாம் என்று சில நாட்களுக்கு முன்பு அங்கு நடை பெற்ற அறிவியல் கருத்தரங்கிற்குச் சென்று வந்த என் மகள் செப்புகிறாள். பச்சைப் பசேரென்று- பச்சைக் கம்பளம் போர்த்தியது போன்ற காட்சி தரும் ஆங்காங் மலை மேலே அணி அணி யாய்ப் பலநிற வண்ணங்கள் (பெரிதும் சிவப்பு) கொண்ட தாய் இரும்புக் கயிற்றில் தொங்கிக் கொண்டு செல்லும் அந்த வண்ணக் கூண்டுகள் செல்லும் காட்சியை இன்றைக் கெல்லாம் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்கலாம். வண்ணக் கூண்டுக்குள் ஏறிவிட்டாலோ முன்னும் பின்னும் செல்லும் கூண்டுகளையும் கீழே தெரியும் துறை