பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 முகக் காட்சிகளையும்-நகரக் கோபுரக் கட்டடங்களையும் நங்கூரம் பாய்ச்சிய கப்பல்களையும்-காணும்போது இக் காட்சியைக் காணக் கொடுத்துவைத்தோமே, இந்த இன்பம் எல்லோருக்கும் கிடைக்காதா என்ற எண்ணமே தோன்று கிறது. ஒவ்வொரு வண்ணக் கண்ணாடிக் கூண்டும் தரை யிலிருந்து மலை மேலே ஒரு சமவெளித் திட்டிற்குச் செல்ல கால்மணி நேரமாவது ஆகும். அந்தச் சிறு சமவெளித் திட்டுக்குள் நுழையும் கூண்டையும் ஒரிளைஞர் தடுத்து நிறுத்தி உள்ளிருப்போரை இறங்க வைக்கிறார்; பின்னர், திரும்பும் போதும் உள்ளிருந்து இறங்குவதற்குத் தள்ளி விடுகிறார். வண்ணக் கூண்டு ஒவ்வொன்றிலும் -கடின மான பிளாஸ்டிக்|ரப்பர் பொருள் ஒன்றால் அது செய்யப் பட்டது என்று எண்ணுகிறேன்-நாலு பேர் நாலு திசை யிலும் உட்காரலாம். கண்ணாடியோ/கண்ணாடி போன்ற பிளாஸ்டிக்கோ என்று சொல்லத்தக்க மூடிய சன்னல்கள் வாயிலாகச் சுற்றிலும் உள்ள காட்சிகளைச் சிறப்பாக அந்த வண்ணக்கூண்டுப் பாதைக்கு வலமாக இருக்கும் திசையில் ஆங்காங் அழகை அள்ளிப் பருகலாம்-இது போன்ற நேரங்களில்-அப்படிச் சொல்வதை விட, இது போன்ற நேரங்களை நினைவு கூறும் நேரங்களில். மனிதனைப் படைத் த அவனுக்கு-இரு கண்களைப் படைத்து அந்தக் கண்கட்கு அகலத்தையும் நிகலத்தையும் உயரத்தையும் ஆழத்தையும் அடக்கி ஒடுக்கிப் படமாகப் பார்த்து மகிழும் அருமைப் பாட்டை அமைத்த பெருமைமிகு இயற்கையை (இறைவனை?) எண்ணி எண்ணி வியந்து மகிழ்ந்து நன்றி பாராட்ட வேண்டியுள்ளது. மலைமேல் அமைக்கப்பட்டுள்ள கடற்சோலையிலிருந்து கீழே இருக்கும் துறைமுகத்தைக் காணும் காட்சியே ஒப்பு யர்வு இல்லாதது. அடுத்த நிலையில் ஓரிடத்தில் குளிர்ச்சிப் படுத்தப்பட்ட (ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட) சுரங்க வழியில் ஒருபுறம் பார்த்தால் கடலுக்குள் இருக்கும் மீன் வளக் காட்சியெல்லாம் தெரிகிறது. நாமும்தான் மெரினா