பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 வில் இருக்கும் மீன் காட்சியகத்தைப் பார்த்திருக்கிறோம். ஒரு முறை பார்த்த பின் மறுமுறை பார்க்கத் தோன்றுவ தில்லை! ஏன் திரும்ப நினைத்துப் பார்க்கவும் தோன்றுவ தில்லை. ஆனால் ஆங்காங் மலைமேல் இருக்கும் இயற்கை போன்ற செயற்கைக் கடற்காட்சியை நினையும் போதெல் லாம் நெஞ்சம் அங்கே வினாடி வேகத்தில் போப் விடுகிறது. உடலைக் கொடுத்த இயற்கை (இறைவன்?) உடலின் சிறந்த பகுதியாகிய இந்த உள்ளத்தையும் கொடுத்தானே: அவன் ஏனோ நமக்கு அழியாத உடலைக் கொடுக்க வில்லை? வைகுந்தத்தில் நித்திய சூரிகளாக இருக்கிறார் களாமே! இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் பெறினும்- அச்சுவை பெறினும் வேண்டேன்’ ஆனால், ஒரு வேளை கைலாசம் வைகுந்தம் இருந்து விட்டால்! அது முடிவாகும் வரை இந்த இன்பத்தை இழப்பானேன்? அடுத்து ஆங்காங் மலையில் ஒரு பெரிய நீச்சல் குளம் போன்ற ஒன்றில் டால்பின்" என்று சொல்லப்படும் பெரு மீன்களின் நடனக் காட்சிகள் காட்டப்படுகின்றன. நீருக்குள் இருந்து அம்மீன்கள் வெளிவந்து சொன்னபடி எல்லாம் ஆடுகின்றன! அழகிய பெண் ஒருத்தியை நீண்ட அந்த நீச்சல் குளத்தில் ஒரிடத்திலிருந்து மறு இடத்திற்குத் துரக்கிச் செல்கின்றன. நம் ஊர் ராஜரத்தினம் ஸ்டேடியம், சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம், நேரு ஸ்டேடியம் போன்ற பந்தயம் பார்க்கும் படிக்கட்டு அரங்குகளிலிருந்து இந்த டால்பின் காட்சிகளைக் கண்டு மக்கள் களிக் கின்றனர். முக்கியமாக டால்பின் குதித்துத் தன்னை ஆட்டுவோன் கன்னங்களில் முத்தம் கொடுக்கும் காட்சிக்கு. எவ்வளவு முத்துக்கள் வேண்டுமானாலும் பரிசில் வழங்க லாம்! . - டாக்டர் மு. நாகநாதன், டாக்டர் து. நடராசன், டாக்டர் சீனிவாசன் ஆகியோருடன் நானும் காணற்கரிய இக்காட்சிகளைக் கண்டுவிட்டு ஆங்காங் நகருக்குத் திரும்பி