பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 னோம். இக்காட்சிகளைக் காண கார் கொடுத்து உதவிய இந்தியன் ஓவர்சீஸ் பாங்கு ஆங்காங் கிளை மேலாளருக்கும் அங்குப் பணியாற்றும் நிர்மலுக்கும் நாங்கள் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். ஆங்காங் இயற்கைக் காட்சிகளைக் கண்ட மனநிறை வோடு திரு. மறைக்காடர் வீட்டிற்குத் திரும்பிய நான் அன்றிரவு நன்றாக உறங்கினேன். ஆங்காங்கில் உள்ள பல கட்டடங்களைப் போலவே திரு. மறைக்காடர் இருக்கும் பல அடுக்குக் கட்டடமும் மலையை ஒட்டியே - மலைமேலேயே கட்டப்பட்டுள்ளது. பொழுது புலரும் போது- (அந்த நேரத்தைத்தான் நம் அடிவயிறு அலாரம் வைத்தது போல் அறிவித்து விடுமே) சன்னல் வழியே மலையைப் பார்த்தேன்- படுத்தபடியே. செடிகளும் கொடிகளும் மரங்களும் நிறைந்த அம்மலையில் ஒரு மனிதன் மெல்ல மெல்ல இறங்கிக் கொண்டிருந்தான். அவன் உடம்பை ஆங்காங்கின் நாகரிக உடை அணி செய்ய வில்லை. இடுப்புத் துணியும் தலையில் முண்டாசும்’ -மட்டுமே இருந்தன. அவன் ஆங்காங் பழங்குடி மகன்" என உணர்ந்து கொண்டேன். அவன் நிறத்தாலும் உடல மைப்பாலும் சீனன் போலிருப்பினும் உடையால் தமிழன் போலத்தான் இருக்கிறான். நேயர்களே! ஆயிரங்கண்ணோன் அருங்கலச் செப்பு' அகன்றாற் போன்றே ஆங்காங் பற்றிய கட்டுரையும் அகன்று கொண்டே போய்விட்டது. விரைவில் முடிக்க வேண்டும். சீனாவிற்கு-செஞ்சீனாவிற்கு-மக்கள் சீனா விற்கு-மால்கம் ஆதிசேஷய்யா போன்ற யுனஸ்கோ வல்லாளர்களும் உலகில் நான் பார்க்காதநாடு சீனா தான் என்று குறிப்பிடும் அந்த மூங்கில் தினா நாட்டுக்குப் போக வேண்டும். அதற்கு முன் இரண்டு கருத்துகள்: 1.ஆங்காங் பட்டப்பகலிலேயே எவ்வளவோ அழகாய் உள்ளது? நட்ட நடு நிசியிலோ நட்சத்திர இரவாய் இன்பம் செய்கிறது: