பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 ஈரழகும் பேரழகுதான்! 2. அமெரிக்க நூலொன்று எந்த எந்த நாடு பற்றி எந்த எந்த இதழில் எப்போது எப்போது யார் யார் என்ன என்ன தலைப்பில் கட்டுரை எழுதியுள் ளார்கள் என்று அடைவு செய்து தருகிறது. அதன் வாயி லாக ஆங்காங் பற்றிய கட்டுரைகளைத் தேடினேன். The New Yorker orgårp Q&p Our Far Fang CorrespondentsHong Kong Dream என்ற தலைப்பில் 1982, செப்டம்பர் 13-ஆம் நாள் இதழில் ஒரு கட்டுரையை கேலிச் சித்திரங் களுடன் வெளியிட்டுள்ளது. அதை எழுதிய சாப்பாட்டு ராமானாகிய ஒருவனின் (ஏன் அப்படிச் சொல்கிறேன் என்பதைச் சென்னையில் உள்ள அமெரிக்கன் சென்டரில் உள்ள அக்கட்டுரையைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்!) சுவைக் கட்டுரையைவிடத் தமிழ்ச்சுவை நாடும் உங்கள் தோழனாகிய என் கட்டுரை உங்கட்கு எவ்வளவோ சுவைக்கும்-பயன்படும்! உறுதி!