பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஆயிரங்கண்ணோன் அருங்கலச் செப்பு.ll ஆங்காங்கில் இருந்து புறப்பட்டுச் சீனாவுக்குள் நுழை யவே ஆவல். ஆனால், ஆங்காங் என்னை எளிதில் பிரிவ. தாக இல்லை, மறுபடியும் சீனாவிலிருந்து திரும்பி ஆங்காங் வந்துதான் டோக்கியோவிற்குப் பறக்கப் போகிறேன். என்றாலும், ஆயிரங்கண்ணோன் அருங்கலச் செப்பாய் இலங்கும் ஆங்காங் என்னை எளிதாக விடுவதாயில்லையே! மார்ச்சு 8.ஆம் நாள் சென்னை எத்திராசு கல்லூரிக்குப் போயிருந்தேன்-சென்னைப் பல்கலைக் கழகம் ஐந்தாண்டு கட்கு ஒருமுறை தன் ஆளுகையில் உள்ள கல்லூரிகளை ஆய்வதற்காக நியமிக்கும் குழுவில் ஒர் உறுப்பினனாக. இதனால் நான் பெற்ற பேறுகளும் மனநிறைவுகளும் பல முதலாவதாக, திரு. வி. எல். எத்திராஜ் அவர்களின் அறிவாற்றலில் எனக்கு மெத்த மதிப்பும் ஈடுபாடும் உண்டு, அடுத்து, என் ஒரே பிள்ளை-ஒரே மகள் - திருமதி டாக்டர் எழிலரசி பாலசுப்பிரமணியன் தன் பி. எசி. பட்டத்திற். காகப் படித்த கல்லூரி அந்தக் கல்லூரி. இவற்றினும் பெரிது அண்மையில் அக்கல்லூரி முதல்வர் திருமதி வசந்திதேவி அவர்கள் மகளிர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டிருப்பதே