பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 ஆகும். (இவ்வம்மையாரும், யானும் 47-50-இல் பச்சை யப்பர் கல்லூரியில் ஒருசாலை மாணவர்கள். இதுவும் என் தனி மகிழ்வுக்குக் காரணம்.) அரசியல் கருத்து வேறுபாடுகட்கு அப்பாற்பட்ட நிலையில், நம் தமிழக முதல்வர் செய்துள்ள ஒரு பெருஞ் செயல்கள் : 1. தமிழ்ப் பல்கலைக் கழகம்; 2. மகளிர் பல் கலைக் கழகம். அவரிடம் அடியேன் எதிர்பாக்கும் இன் னுமொரு பல்கலைக் கழகம் ஊனமுற்றோர் பல்கலைக் கழகமே ஆகும். இதுவும், உலகச் சிக்கல்களை ஆய்ந்து தீர்க்கத் திட்டங்கள் வகுக்க இருப்பதுபோலவே, ஊனமுற் றோர் சிக்கல்களைத் தீர்க்கவும் அவர்கட்குப் பல்வகைப் பயிற்சிகள் படிப்புகள் தரவும் பெரிதும் பயன்படும். மேற்கண்ட பின்னணியில் யான் எத்திராசு மகளிர் கல்லூரிக்குச் சென்றபோது எடுத்துக்காட்டான - முன் மாதிரியான முறையில் நடத்தப்படும் அக்கல்லூரியின் நூலகத்திற்கு - அதிலும் நோக்கு நூல்கள் (Reference Books) பகுதிக்குப் போனேன்-எப்போதும் எனக்குள்ள வழக்கம்போல். jūGLumg, The Great Cities — Time — Life Books - என்ற வரிசையில் இருந்த 20-க்கு மேற்பட்ட புத்தகங் களைப் பார்த்தேன். அதன் விளைவாக அவ்வரிசையிலுள்ள நூல்களில் ஒன்றாகிய Hongkong பற்றிய அரிய அழகிய புத்தகத்தை வாங்கிப் படித்தேன். ஆம் அந்தப் புத்த கத்தின் அழகையும், அறிவையும் எவராலும் சொல்லி விளக்க முடியாது; பார்த்தால்தான் நம்ப முடியும். yoய see it to believe it orérugi, Gufra. . மேலும், இப்படிப்பட்ட படப் புத்தகங்களைப் பார்க் கும்போதெல்லாம். இத்தகைய நூல்கள் தமிழில் எப்போது வருமோ என்று என் தமிழ் நெஞ்சம் ஏங்குகிறது. 3208-5