பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. யுனெஸ்கோ கூரியர்போல், இத்தகு நூல்கள் தமிழ் உள்ளிட்ட உலகமொழிகள் அனைத்திலும் வெளிவர ஏற் பாடு செய்தால், குறைந்த செலவில் நிறைந்த அறிவை உலக மக்கட்குப் புகட்டலாம். இதை யுனெஸ்கோவே செய்யலாம். முன்னமே நான் குறிப்பிட்டிருப்பதுபோல் என் பயணக் கட்டுரைகளைப் படிப்புக் கட்டுரைகளாகவும் அமைக்க வேண்டுமென்பதே என் அவா. இதன் காரணமாகவே, ஆங்காங்கிலிருந்து சீனாவின் துறைமுகத் தென் வாயிலாகிய காண்டோனுக்கு டாக்டர் மு. நாகநாதன், டாக்டர் து. நடராசன், திரு. டி. எம். சீனிவாசன் ஆகியோருடன் யான் புறப்படுதல் சற்றுத் தாமதப்படுகிறது. அதுவும் நேயர்கட்காகத்தான். எனவே, அறிவுத் தாகம் உடைய நேயர்கள் அதன் காரணமாகவே சற்றுப்பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். பொறுத்தார் பூமியாள்வார் 1 இக்கட்டுரைகளை எழுத மணிக்கணக்காக நான் படும் பாட்டிற்கு அது ஒன்றுதானே நீங்கள் அளிக்கக் கூடிய பரிசு! The Great Cities - Time-Life Books-sräärp auñ«oæu?ëi; Hongkong பற்றிய புத்தகம் (இவ்வரிசையில் உள்ள மற்ற புத்தகங்களைப் போலவே) நமது கலைக்களஞ்சியம் | சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி ஆகிய வற்றின் நீள, அகல வடிவினதாய் (டெம்மி . 10; x 6;.) உள்ளது; மொத்தத்தில் 200 பக்கங்கள் கொண்ட இந்நூல் 125-க்கு மேற்பட்ட சிறியதும் பெரியதும் மிகப்பெரியது மான வண்ணப்படங்களைக் கொண்டது : (கேலிச் சித்திரங் களும் உண்டு :) ஆங்காங்கின் நில அமைப்புகள், வளங்கள் அனைத் தையும் மக்கள் வாழ்க்கைப் போக்குகள் அனைத்தையும் வகைவகையாய், வண்ண வண்ணமாய்க் காட்டுவது; படங்கள் பெரிதோ, கருத்துகள் பெரிதோ என்று எண்ணும்படி செய்வது; ஆங்காங்கைக் கண்டாரும்