பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நாலரை இலட்சம் மக்கள் இங்கு விடாப்பிடி யாப் வாழ்கிறார்கள் வளமாக வாழ முனை கிறார்கள். இது அவர்கள் விடா முயற்சியே t உலகிலேயே ம ற் ற வர் கள் பொருள்களையே வாணிபம் புரிய ஆரம்பித்த இந்த இடம்-இப்போது சொந்த உற்பத்திகளையும் செய்யத் தொடங்கி புள்ளது ! 您 {}; ஆங்காங் என்ற சீனப் பெயருக்கு "நறுமணத் துறைமுகம்' என்று பெயர். (இது சங்க நூல் களில் தலைவியின் நெற்றிக்கு ஊர்கள் உவமிக்கப் படுவதை நினைவூட்டும்) శక్త్ర ஆங்கிலேயருக்கும், சீனருக்கும் இடையே நடந்த அபினிப் போரின் முடிவாக முதலில் 183942 லும் பின்னர் 1860 லும் முறையே ஆங்காங் கும், கெளலோனும் பிரிட்டிஷ் பேரரசுக்கு அடகு வைக்கப்பட்டன. ஆங்காங்கிற்கும் இலண்டனிற். கும் 7,852 மைல்கள் : பெரிய பிரிட்டிஷ் பேரரசு க்கு இந்த 29 சதுர மைல் மலைப்பகுதி பத்து மைல் நீளமும் இரண்டு முதல் ஐந்து மைல் அகலமும் உள்ள இந்த நிலப் பகுதி எதற்கு? மேலும் அந்த நாளில் இந்தத் தீவு கடற்கொள் ளைக்காரர்கட்கும் புகலிடமாய் இருந்தது; 5,000 மக்களே இருந்தனர். கொள்ளை நோய்களுக்கும், சூறாவளிப் புயல்களுக்கும் இலக்காய் இருந்த இடம் இந்த இடம். ஆனால், இன்றோ உலகின் ஒப்பற்ற துறைமுக நகரம் ! છઠે ஆங்காங்கில் நடைபெறும் திருவிழாக்களுக் குள்ளேயே பழையது-பெரியது பொங்கப்பத் திருவிழா. இறந்த ஆவிகளை மனநிறைவு செய்யக்