பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 (ஆங்காங்கில் சீனப் பயணத்திற்கு முன் மூன்று: நாளும் பின் மூன்று நாளும் இருந்தும் நான் ஒரு பொம்மைகூடப் பார்க்கவில்லை: வாங்கவில்லை! காரணம் பட்டிக் காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போல் அல்லவா என் நிலை இருந்தது: உடலும் உள்ளமும் போதும்', 'இதுவே போதும் என்று ஓய்ந்து ஒடுங்கும் நொய்ந்த நிலை யல்லவா எந்நிலை!) - ஃ அகதிகள் நாடாக இருந்த ஆங்காங் ஜப்பா லுக்கு அடுத்தபடியாக வானொலிப் பெட்டி களை வையகத்துக்கு வழங்கும் நாடாக வளர்ந்து விட்டது என்றால் அந்தச் சீனகாட்டு அகதிகளின் அறிவையும் ஆற்றலையும் என்னென்பது ? ပ္ခ်ဳံ ஆங்காங்கில் ஒவ்வொரு வினாடியும் கழுத் தறுக்கும்படியான போட்டிதான் ! எனவே அதற். குரிய தற்காப்பு, எச்சரிக்கையாக எப்போதும் இருத்தல் தான் !

  • 。 リ》

ஆங்காங்கில் இடுகாட்டு மண்ணுக்கும் விலை அதிகம் ! இடுகாடும் நிலையில்லாதது :-புதைத்த பிணத்தைச் சில ஆண்டுகள் கழித்துத் தோண்டி எடுத்து எலும்புகளை மட்டும் அடுக்கிச் சிறிய இடத்தில் மறுபுதையல் செய்கிறார்கள். છઠે 1970-இல் ஓராண்டில் மட்டும் . ஆங்காங்கில் 200 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. ઈ. ஆங்காங்கில் ஓரிடம் (நம் சென்னைக் கடற். கரை சாலையில் இருப்பது போன்ற) ஐஸ்ஹவுஸ்.