பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 இங்கே வட சீனாவிலிருந்து குளிர் காலத்தில் ஐஸ் கட்டிகள் கொண்டுவரப்பட்டுக் கோடைக் காலத்தில் விற்கப்பட்டன. 3% 'இன்பத்தை அனுபவி; செல்வத்தைச் சேர்’ இதுவே ஒரு ஆங்காங் ஆள் மற்றொருவனுக்கு வழங்கும் நல்வாழ்த்து; புத்தாண்டு வாழ்த்தும் இதுவே. 豊 急塗 பழமைக்குப் பழமையையும் புதுமைக்குப் புதுமையையும் போற்றும் ஆங்காங்கில் எலெக்ட் ராணிக் கணிப்பிகள் (computers) வளர்ந்திருப்பது போலவே பழங்கால பில்லி, சூனிய, மந்திர, சோதிட வல்லுநர்களும் முற்றிலுமாக மாய்ந்து போகாமல் இருக்கிறார்கள். இது பற்றி இப்போது நாம் அகழ்ந்து வரும் ஆங்காங் செய்திச் சுரங்க நூலாசிரியர் கூறும் சுவையான குறிப்புகளுள் ஒன்றை மட்டும் பார்க்கலாம். அந்தச் சோதிடர் - முகம் பார்த்தே குணம், வாழ்க்கைப் போக்குகள் பற்றி அறுதியிட்டு உறுதி கூறும் வல்லாளர்-எங்கள் முகங்களைப் பலமணித் துளிகள் கூர்ந்து உற்றுப் பார்த்தார். அப்புறம் சீனப் பஞ்சாங்கப்படி எங்கள் பிறந்த நாள்களைக் குறித்துக் கொண்டார். எங்கள் திட்டங்கள்-ஒரு நீண்ட பயணம், வீடு மாற்றல் இவை இந்த ஆண்டு நடைபெறாது; அடுத்த ஆண்டே நடைபெறும் என்று துல்லியமாகக் கூறினார்; அப்படியே நடந்தது. இங்கிலாந்தில் இருந்த எங்கள் குழந்தை களின் பிறந்த நாளைக் குறித்துக் கொண்டு அக் குழந்தைகளை நேரில் அறிந்தவர் போல அவர்