பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 களின் எதிர்காலம் பற்றி எடுத்துரைத்தார். எங்கள் அடுத்த வீட்டுக்காரர்க்கு அ வ ர் மனைவி பொறுக்க முடியா வயிற்று வலியால் துன்பப்படுவ தைப் பொறுக்க முடியவில்லை. எந்த எந்த மருத்துவமோ செய்து பார்த்து விட்டார்; பயனில்லை. ஒரு புகழ் பெற்ற சோதிடரை அழைத் தார்; அவர் நண்பர் வீட்டுக்குள் வந்து பார்த்தார்; "வேறொன்றும் செய்ய வேண்டாம். சாலையில் உலவும் ஆவிகள் பாதையில் இருக்கும் இந்தக் கட்டிலைச் சற்று அப்பால் நகர்த்திப் போடுங்கள்; போதும் என்றார். அப்படியே செய்தார்கள்; அம்மையாரின் அடிவயிற்று வலி உடனே பறந்து இத்தகைய நம்பிக்கைகள் நம் நாட்டிலும் உண்டு. தெற்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பார்கள்; வீட்டு வாசற்படிக்கும் கோயில் வாசற்படிக்கும் குறுக்கே படுக்கக் கூடாது என்றும் சொல்லுவார்கள்.) કરું இடுகாட்டில் இடமில்லா நெருக்கடியால் ஆறாண்டுக் குத்தகைக்கு அமைக்கப்படும்) கல் லறைகளில் இறந்தவர்கட்கு விருப்பமான உணவுப் பொருள்களைப் படைத்து வழிபாடு செய்தல் பழஞ் சீனப் பண்பாடு. அதன்படி அப்பழமையில் ஊறிய ஆங்காங் சீனர்கள் இன்றும் வழிபாடு நடத்து கிறார்கள். (நம் ஊர் மசானக் கொள்ளைதான்) ઈદ சீனப்புராணக் கதைகட்கும் பைபிள் புராணக் கதைகட்கும் இடையே சிறப்பு வாய்ந்த ஒப்புமைப் பகுதிகள் உள்ளன. (பிரளயக் கதை - சீர்காழி