பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பழஞ்சீனர்களின் மூடநம்பிக்கைக்கு ஒரு சான்று : பெரும்பாலோர் சீனப் புத்தாண்டின் போது தொங்கும் மணிகள்’ எனப்படும் வெண் மலர்களை வீடுகளை அணி செய்யப் பயன்படுத் துவர். ஆனால் சிலர் இதற்கும் அஞ்சுவர். காரணம் தொங்கும் மணிகள் என்ற தொடரில் உள்ள தொங்கும்’ என்ற சொல் தூக்குக் கயிற்றை அவர்கட்கு நினைவூட்டி அச்சுறுத்து கிறதாம்! இத்தகைய சொல் தொடர்பான மூட நம்பிக்கை தமிழர்களிடமும் உண்டு. எடுத்துக் காட்டு: இல்லை", போகிறேன்’ என்று சொல்ல மாட்டார்கள், பிச்சை கேட்போரிடமும் வேறி டம் பார், கை வேலையாய் இருக்கிறது, அப் புறம் வா, போய்வா’ என்றே கூறுவர்} ● 夺莎 கேரளத்தில் ஒனத்தின்போது வள்ளங்கள் {படகுகள்) போட்டி நடப்பது போல வேதாளப் போட்டிப் படகு ஆங்காங்கில் கோடை தொடங் கும்போது (மார்ச்சு 14 முதல் எனலாம்) நடக்கும். இது 2300 ஆண்டுகளாக நடைபெறுகிறது எனலாம். அண்மைக் காலத்தில் மகளிர் மட்டுமே கலந்து கொள்ளும் வேதாளப் படகுப் போட்டி களும் நடைபெறுகின்றன. છઠે சீனர்கள் ஆண்டுதோறும் வேதாளப்படகுப் போட்டி நடத்துவதற்கு ஒரு நெஞ்சை அள்ளும் வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகிறது. அது வருமாறு: சூயன் என்பவர் ஒரு புகழ் பெற்ற கவிஞர்; கி.மு. 400-இல் இருந்தார். அக்கவிஞர் சூயூ என்ற கொடுங்கோல் மன்னனின் ஆட்சியைக் கண்டித்து