பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 ஒரு பெரும் ஏரியில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதை அறிந்த சீன மீனவர்கள் அவர் திருவுடலைத் தேடி தேடித் துழாவினர். படகுகளில். ஆனால் புரட்சிப் புலவரின் உடல் கிடைக்கவில்லை. அதனால் மனம் நொந்த சீன மீனவர்கள் நீரிலிருக்கும் தீய ஆவிகளால் கவிஞரின் ஆன்மாவுக்குக் கேடுகள் ஏதும் ஏற்படாமல் அமை தியாக இருக்கப் பொங்கிய சோற்றை : அரிசி அப்பங்களைத் தாமரை இலையில் பொதிந்து போடும் பழக்கத்தை மேற்கொண்டனர். (சீனாவில் நாங்கள் பெரிய பெரிய தாமரைக் குளங்களைக் கண்டோம் :) { பதினான்காம் நூற்றாண்டில் சீனாவை ஆண்ட மங்கோலியரை எதிர்த்து மக்கள் புரட்சி புரிந் தனர். அப்போது ஒரே நேரத்தில் கோவில்களின் உச்சியில் விளக்குகளை ஏற்றிப் புரட்சிக்கு அறிவிப் புக் கொடுத்தனர் அதை நினைவூட்டும் வகையில் இப்பொழுதும் ஒரு முழுநிலா நாளில் ஆங்காங்கில் இருக்கும் சீனர்களும் பலவகையான பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், மீன்கள், வேதாளங்கள், சிங்கங்கள், யானைகள், தேர்கள், இக்கால உந்து வண்டிகள், ஏன்?-போர் டாங்கிகள் போன்ற வடிவங்களில் விளக்குகள் ஏற்றி விழாக் கொண் டாடுகின்றனர். (மேற்கண்ட சில குறிப்புகள் சீனாவில் புரட்சி மரபே ஒன்றியிருந்ததை ஆராயத் துரண்டும். நம் நாட்டில் காந்தியடிகளின் அகிம் சைக்கு ஒரு பின்னணி இருந்தது போலச் சீனாவை யும் மக்கள் | செஞ்சீனாவாக மாவோ மாற்று தற்கும் ஒரு புரட்சிப் பின்னணி இருந்திருக்கிறது. (இது அண்மையில் சீனாவுக்குச் சென்றதாலும் அது தொடர்பான வரலாற்று நூல்களைப் படிப் பதாலும் எனக்கு ஏற்பட்டிருக்கும் தெளிவு :)