பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இறந்தோர்களின் ஆவிகட்காக ஆங்காங் சீனர் கன் கொண்டாடும் விழாக்களுக்குள்ளேயே சிறப் பானது 60 மூங்கில் கம்புகளில் பொருத்தப்பட்ட பொங்கப்பங்களைப் பொழுது புலருமுன் சாடிப் பிடித்துப் பிய்த்துத் தின்பதே ஆகும். 莎 } ஆங்காங் சீனர்கள் சாப்பாட்டு ராமன்கள்": முன்னம் ஓர் அமெரிக்கர் ஆங்காங் அனுபவங்கள் பற்றி எழுதிய கட்டுரையைப் பார்த்துச் சாப் பாட்டு இராமன்' என்று அவரை வைதேன்! அது தவறு; மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். காரணம் ஆ ங் காங் சீனர்களே சாப்பாட்டு இராமன்கள் தான்! ஆங்காங் பலவற்றுக்கும் புகழ் பெற்றிருப்பது போலவே சாப்பாட்டுக்கும் பேர் பெற்றது. ஆங்காங் சீனர்கள் வாழ்வதற்காகச் சாப்பாடு' என்று நினைப்பதில்லை; சாப்பிடு வதற்கே வாழ்க்கை என்று நினைக்கிறார்கள், 签 3 ஆங்காங்கில் கெட்ட சாப்பாட்டுக் கடை" யைக் காண்பது அரிது. ஆங்காங்கில் ஒரு கடையில் 253 வகை நூடுல் கள் நூலிழைகள் போன்ற-இடியாப்பம் போன்ற . உணவு வகை உண்டு. ஆங்காங்கில் எந்த ஓர் உணவு வகையையும் இரண்டாம் முறை சாப்பிடா மல் வேறு வேறு வகையான உணவுகளை வேறு வேறு உணவு விடுதிகளில் இரண்டாண்டுகள் தொடர்ந்து உண்ணலாம்! இந்த அவிழ்சுவை இப்போதும் ஆங்காங்கில்தான் மிக அதிகம். ஒரு காலத்தில் பீகிங்கும் போட்டியாகத்தான் இருந்