பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்மையில் மாண்புமிகு தமிழகக் கல்வி அமைச்சர் சி. அரங்கநாயகம் அவர்கள் தலைமையில் டாக்டர் மு. நாகநாதன் அவர்கள் முன் முயற்சியால் மக்கள் சீனத் திற்கு அந்நாட்டு அரசின் அன்பார்ந்த அழைப்பின் பேரில் செல்லும் பெரும்பேறு எளியேனுக்கும் கிடைத்தது. சீனா செல்ல வேண்டும் என்றதுமே பெருங்கவிஞர் பாரதியார் தம் கட்டுரைப் பகுதியில் போற்றிப் புகழ்ந்துள்ள சீனத்து வீரப் பெண்மணி சியூசினைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பேரவா பிடர் பிடித்து உந்தியது. 1918-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள் தேதி யிட்டுப் பெருங்கவிஞர் பாரதியார் புதுவையில் நடை பெற்ற பெண்கள் உரையாடல் கூட்டம் ஒன்றின் நிகழ்ச்சி களைத் தெரிவித்துள்ளார். அதில் பாரதியார் தம் இரு கண்மணிகளனைய பெண்மணிகளாகிய திருமதிகள் . அப் போது செல்விகள் - தங்கம்மாள் பாரதி, சகுந்தலா பாரதி ஆகிய இருவரின் வாயிலாகவும் சீனத்து வீரப் பெண்மணி சியூசினைப் பற்றிய செய்திகளை முதன்முதலாகத் தமிழ் உலகத்துக்குப் பாரதியார் தெரிவித்துள்ளார் . இல்லை, அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால் அறிமுகமே பெருமுகம்! இதில் பெருங்கவிஞர் பாரதியார் THE ASATIC REVEW" என்ற ஆங்கில இதழில் சியூசினைப் பற்றி வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையில் உள்ளத்தைப் பறிகொடுத்து அவ்வாங்கிலக் கட்டுரையில் உள்ள செய்திகளைத் தமிழுலகம் உடனடியாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற பேராவலால் அக்கட்டுரையின் சுருக்கத்தைத் தம் தலை மகள் தங்கம்மாள் பாரதியின் வாயிலாக வடித்துள்ளார் என்று விளங்குகிறது. அவ்வாறே பெருங்கவிஞர் பாரதியார் தாம் படித்த ஆங்கிலக் கட்டுரையில் உள்ள சியூசினின் கவிதைகளுள் மூன்று பாடல்களைத் தமிழ் கவிதையாக்கித்