பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தம் இளைய மகள் சகுந்தலா பாரதியைக் Qఉrణి மேற் படிப் புதுவைப் பெண்கள் கூட்டத்தில் பாடும்படியும் செப் துள்ளார். சீனமொழிப் பாடல்கள் மூன்றை ஆன முதலாகத் தமிழ் பாடல்களாக்கியது இந்நிகழ்ச்சியின் போதுதான் என்றும் துணியலாம். இவ்வழகிய பாடல்களை மேற்குறித்தவாறு பாரதியின் கட்டுரைகள் தொகுப்பில் பெண்கள் சம்பாஷனைக் கூட்டம்' என்ற தலைப்பில் பார்க்கலாம். 1954-இல் வெளிவந்த சென்னை அரசாங்க வெளியீடாகிய பாரதி நூல்கள் கவிதை"த் தொகுப்பில், மூன்றாம் பாகத்தில் சமூகம்' என்ற பிரிவில் பெண் விடுதலை என்ற தலைப்பில் 263-ஆம் பக்கத்திலும் இந்த அழகிய பாடல்களைக் கண்டு மகிழலாம். அவை வருமாறு : பெண் விடுதலை விடுதலைக்கு மகளிரெல் லோரும் வெட்கைகொண்டனம்; வெல்லுவம் என்றே திடமனத்தின் மதுக்கிண்ண மீது சேர்ந்து நாம்பிர திக்கிணை செய்வோம். உடையவள் சக்தி ஆண்பெண்ணிரண்டும் ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்: இடையிலேபட்ட கீழ்நிலை கண்டீர்: இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ? திறமை யால்இங்கு மேனிலை சேர்வோம் ; தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் ; குறைவி லாது முழுநிகர் நம்மைக் கொள்வ ராண்க ளெனிலவ ரோடும் சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத் திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம் ; அறவி முந்தது பண்டை வழக்கம் ; ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே. விடியு நல்லொளி காணுதி நின்றே, மேவு நாகரிகம்புதி தொன்றே ,