பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 கொடியர் நம்மை அடிமைகள் என்றே கொண்டு, தாம்முதல் என்றன ரன்றே. அடியொ டந்த வழக்கைக் கொன்றே, அறிவு யாவும் பயிற்சியில் வென்றே கடமை செய்வீர், நந்தேசத்து வீரக் காரிகைக் கணத்தீர், துணிவுற்றே. இப்பாடல்கள் பற்றி மேற்படி அரசாங்க வெளியீட்டில் அநுபந்தம் மூன்றில் விளக்கக் குறிப்புகள் என்ற தலைப்பில் பின்வரும் குறிப்பு காணப்படுகிறது. அது வருமாறு : சியூசின் என்பாள் சீன பாஷையில் பாடிய பாட்டின் மொழி பெயர்ப்பு. பாரதி கட்டுரை களில் சியூசின் செய்த பிரசங்கம்’ என்ற பகுதியில் இப்பாடல் உள்ளது. இந்தச் சீனத்து வீராங்கனை சியூசின் யார்? இவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவே இக்கட்டுரையின் தொடக்கத்தில் சுட்டியவாறு யான் சீனப் பயணத்தையே மேற்கொண்டேன் என்றால் மிகையாகாது. எனவே, பீஜிங் (Being|Peking) விமான நிலையத்தில் இறங்கியதும் வரவேற்க வந்திருந்த சீன நண்பர்களிடம் இந்த வீரப் பெண்மணியைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதே என் முதல் வேலை என்று குறையிரந்தேன். அவர்களும் என் இதயத் துடிப்பை உணர்ந்து கொண்டு உடனடியாக உதவுவதாகக் கூறினார்கள். ஒரு சில நாள்களிலேயே சீனா வின் மிகச் சிறந்த பட இதழாகிய ஓர் இதழில் சியூசினின் படம் இருப்பதைக் கொண்டு வந்து காட்டினார்கள். அதன் ஒரு படியையும் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். அடுத்த சில நாள்களிலேயே சியூசின் பற்றி உலகப் புகழ் பெற்ற சீன வெளியீடாகிய Chinese Litrature என்ற திங்கள் இதழின் ஜூலை 1982 வெளியீட்டை என்னிடம் மகிழ்ச்சியோடு கொண்டு வந்து கொடுத்தார்கள். ஆம், ஜூன் மாதத்தி லேயே வந்து விட்ட ஜூலை இதழைக் கொடுத்தார்கள்! காரணம் அந்த இதழில் சியூசின் பற்றி ஓர் அருமையான ஆய்வுக் கட்டுரை இருப்பதுதான். இந்நிகழ்ச்சியை அடுத்து