பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பீக்கிங்கில் இருக்கும் மிகப்பெரிய வரலாற்று அருங்கலை அகத்தை (museum) நாங்கள் பார்க்க நேர்ந்தது. அவ்: வருங்கலை அகத்தில் இக்காலச் சீனத்தின் வரலாறு பற்றிய பகுதியில் சியூசினின் படம் இருக்கும் செய்தியைச் சொன் னார்கள். மாலை ஐந்தாகிவிட்டபோதிலும் அப்படத்தைப் பார்க்கவேண்டுமென்று நான் ஒற்றைக்காலில் (உண்மை யாகவே இடதுகால் வலியால் நொண்டியாக) நின்றதை உணர்ந்து அந்த அருங்கலையகத்தின் தலைவர் அவசர அவசரமாக அந்தப் படத்தைக் காட்ட என்னை அழைத்துச் சென்றார். படத்தைப் பார்த்தேன். ஆம் கயிலை கண்ட கார்ைக்கால் அம்மையார் ஆனேன். இல்லை! இல்லை: மாஸ்கோ கண்ட ஜீவா ஆனேன்? அந்தப் படத்தின் அடியில் நானும் அருங்கலைக் காட்சியகத்தின் தலைவரும் கைகோர்த்து நிற்பதை டாக்டர் மு. நாகநாதன் அவர்கள் அழகாகப் படம் பிடித்தார்கள். பாவேந்தர் *தமிழச்சியின் கத்தி' கற்பனையில் பிறப்பதற்கு முன்பே சீனச்சியின் செங்கத்தி உண்மையிலேயே உண்டாகி, யிருத்தலைக் காணலாம். அத்துடன் சியூசின் பற்றிய சீனக் கலைக்களஞ்சியம் ஒன்றிலே வெளிவந்துள்ள ஒரு குறிப்பை பீக்கிங் வானொலி நிலையத்தில் தமிழ்ப்பகுதியில் பணி புரியும் திரு. வாங்போசி அவர்கள் (இவரை நாங்கள் மா.பொ.சி. என்றும் அழைத்து மகிழ்ந்தோம்) தமிழில் மொழி பெயர்த்துத் தம் கைப்பட எனக்கு எழுதிக் கொடுத் துள்ளார்கள். அந்தச் சீனர் படைத்துள்ள செந். தமிழ் ஆக்கம் வருமாறு: சியூசின், 1879இல் செகியாங் மாநிலத்து செளசியிங் நகரத்தில் பிறந்தவர். 1904 இல் (சிங் வம்சத்தில்) அவள் படிக்க யப்பானுக்குச் (ஜப்பானுக்குச்) சென்றாள். யப்பானில் தங்கியிருந்தபோது சீன மாணவி மாணவர் களால் ஸ்தாபனம் செய்யப்பட்ட புரட்சிகர நடவடிக்கை களில் அவள் சுறுசுறுப்பாகக் கலந்து கொண்டாள். 1905இல் அவள் மகத்தான ஜனநாயகப் புரட்சிவாதி டாக்டர்