92 சீர்திருத்தச் செம்மல்
அதனால்தான் வேண்டாமென்று சொல்கிறேன்' என்று அன்றிருந்த நம் நிலைக்கு இரங்கி வருந்திக் கூறினார்.
சித்திரபாரதி செப்புவது
சண்முகனாருக்கும் பாரதியாருக்கும் இருந்த தொடர் பையும், பாரதியின் குடும்பத்தை ஆதரிக்க அவர் எண்ணி யதையும், அவர் மீது பாரதியார் பாடல் பாடியதையும் திரு. ரா.அ. பத்மநாபன் தாம் எழுதிய 'சித்திரபாரதி' என்ற நூலில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
"கானாடுகாத்தானுக்கு வருமாறு வை.சு. சண்முகம் என்ற தனவணிக அன்பர் வேண்டிக் கொண்டதின் பேரில் சுப்பிரமணிய பாரதியார் 28-10-1919 அன்று காலை 10.30 மணிக்கு, காரைக் குடியில் சிவன் செயல் ஊருணித் தென்கரையிலிருந்த மதுரை பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கினார். பல இளைஞர்கள் அவரை வரவேற்றனர்.
அன்று மாலை பாரதி கானாடுகாத்தான் போய்ச் சேர்ந்தார். அங்கே வை.சு. சண்முகம் இல்லத்தில் ஒன்பது நாள் இருந்தார். கவிஞரின் தேவைகள் யாவும் அங்கு கவனிக்கப் பெற்றிருந்தன.
அந்த ஊரிலேயே பாரதி இனித் தங்கி வசதியாய் வாழலாமென, 'செல்லம்மாவை அழைத்துவர ஒரு ஆளைக் கடயத்துக்கு அனுப்பி னார். ஆனால் செல்லம்மா வரவில்லை. அதனால் மனைவியின்றி இங்கே வாழ இயலாதென்று பாரதி, 6-11-1919 அன்று கிளம்பிச் சென்று விட்டார்..... கானாடு காத்தானில் வள்ளல் சண்முகத்தின் மீது பாரதி ஒரு பாடல் பாடியுள்ளார். எட்டயபுரம் ஜமின்தாரிடம் நொந்து, "மன்னர்மிசைச்