பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/107

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

97

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள செய்தி, நீலாவதி, இராம சுப்பிர மணியம் கலப்புமணம் செய்து கொண்டமைக்காகப் பாராட்டுரை நிகழ்த்தும் பொழுது, மு. சின்னையா செட்டியார் (பண்டிதமணி மு. கதிரேசனாரின் இளவல்) குறிப்பிட்டது.

(நீலா. இராம. வரலாறு)

'கிராப்பு' வைத்துக் கொள்வதற்கு, அக்காலத்தில் அவ்வளவு எதிர்ப்பு இருந்தது செட்டிநாட்டில். செட்டி மக்கள் தலையை மழுங்க மழித்துக் கொள்வது அக்கால வழக்கம். அவ் வழக்கத்துக்கு மாறாக நம் சண்முகனார் துணிந்து 'கிராப்பு' வைத்துக் கொண்டார். சிறு வயதிலேயே முற்போக்கெண்ணம் அவரிடம் இயல்பாகவே மலர்ந்திருந்தமையால் சமுதாயத்துக்கு அஞ்சாது, எதிர்த்து நின்று, 'கிராப்பு' வைத்துக் கொண்டார்.

மகள் திருமணம்

சண்முகனார் தம் மகள் பார்வதிக்குத் திருமணஞ் செய்து வைக்க நினைத்தார். அதற்குரிய முயற்சியில் ஈடுபட்டார்.

செல்வர்கள் இசையாமை

வயி.சு.ச. குடும்பத்திற்குச் சமமாக இருந்த செல்வர்கள். ஐயர் வைத்து முறைப்படிதான் திருமணம் நடத்த வேண்டும்; சீர்திருத்த முறையில் நடத்துவதானால் நாங்கள் உடன்படோம் என்றனர். சண்முகனாரோ உறுதி கொண்ட நெஞ்சுடையவர். தம் கொள்கை யை விட்டுக் கொடுக்க மறுத்து விட்டார்.

சண்முகனார் பணத்துக்கு முதன்மை தராமல் கொள்கைக்கே முதன்மை தரும் இயல்பினர். அதனால்,