88 சீர்திருத்தச் செம்மல்
தமது சமுகத்தில் படித்தவ ராகவும் நல்லவராகவும் தம் கொள்கைக்கு இசைபவராகவும் உள்ள இளைஞருக்குத் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்து, அதற்காக முயன்றார்.
மணமகன் கிடைத்தார்
காரைக்குடியில், மெ. நடராசன் என்ற பெயருடைய படித்த நல்ல இளைஞர் ஒருவர் கிடைத்தார். இவருக்கே மகளைக் கொடுக்க உறுதி செய்தார். பின்னர் மணமகன், எம்.ஏ., டி.காம்., படித்துப் பட்டம் பெற்றார்.
அவர்கள் குலவழக்கப்படி வைதிக நெறியில் திருமணம் நடத்த விரும்பாத சண்முகனார், தமிழவேள் சர்.பி.டி. இராசன் தலைமையில் நடத்த முடிவு செய்து, திருமண அழைப்பும் அச்சிட்டு, அனை வர்க்கும் அழைப்பிதழ்கள் முறைப்படி அனுப்பி விட்டார்.
பங்காளிகள் எதிர்ப்பு
இராயவரத்திலிருந்த பங்காளிகள், 'இதென்ன! சடங்கு முறைகள் இல்லாத திருமணம்! இதற்கு நாங்கள் வரமாட் டோம்' என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.உள்ளூர் உறவினர் வந்து, 'மீண்டும் பங்காளிகளிடம் சென்று, நேரில் வேண்டிக் கொண்டால் வந்து விடுவார்கள்' என்று கூறினார்கள். 'அதெல்லாம் முடியாது; முறைப்படி அழைப்பிதழ் கொடுக்கப் பட்டு விட்டது. வருவோர் வரட்டும்; என் கொள்கைப்படி திருமணம் நடந்தே தீரும்' என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் சண்முகனார்.