நன்றியுரை எங்கள் தந்தையாரவர்கட்கு விளம்பரம் அறவே பிடிக்காத ஒன்று. இன்னும் சொல்லப் போனால் விளம்பரத்தை வெறுப்பவர்கள். அவர்கள் விரும்பாத ஒன்றை விளம்பரம் கருதிச் செய்யவில்லை. அக்காலத்துத் தனவணிகர்கள் அதாவது நகரத்தார் சமூகத்தில் ஒரு எடுத்துக் காட் டாக, முன்னோடியாக வாழ்ந்தவர்கள் எங்கள் தந்தையார். இளைய தலைமுறையினர், கடந்த காலப் பெரியவர்களையும், கடந்தகாலச் சம்பவங்களை யும் அறிந்து அதன் மூலம் பயனும், எழுச்சியும் பெற வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்த நூலை வெளியிடு கிறோம். துக்கநிலையிலிருந்த செட்டிநாட்டையும் செட்டி பார்கள் சமூகத்தையும் தட்டி எழுப்பி, தேசசேவையிலும், சமூக சீர்திருத்தசேவையிலும் ஆங்காங்கே விரல்விட்டு மாண் ணக்கூடிய எண்ணிக்கையிலிருந்தவர்களை ஒன்று சேர்த்து 'தனவைசிய ஊழியர்கள் சங்கம்' என்ற சங்கத்தை தோற்றுவிக்க முதல் காரணமாக இருந்தவர்கள் பா திரு. வை. சு. ஷண்முகம் அவர்கள். தந்தையாரவர்கள் 70 ஆண்டுகட்கு முன்பிருந்தே அவர்கள் நோயில் படுக்கும் வரை நாள் குறிப்பு எழுதி வந்தவர்கள். அவைகள் இருந்திருந்தால், காங்கிரசில், கயமரியாதை இயக்கத்தில் அவர்கள் ஆற்றிய பணிகளைச் ான்றுகளுடன் எழுதியிருக்க முடியும். துர்அதிர்ஷ்ட வசமாக அவைகள் இருக்கும் இடம் தெரியவில்லை.
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/11
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை