வை. சு. சண்முகனார் 101
சாதிப்பற்று இல்லையெனினும் நாட்டுப் பற்று, மொழிப் பற்று, இனப்பற்று இவரிடம் மேலோங்கி நின்றன. இப்பற்று இவர்தம் உள்ளத்தின் அடித்தளத்திற் பதிந்து விட்டமையால் பொதுநலம் பேணி வாழ்வதிலும் தலைசிறந்து விளங்கினார்.
பொது நலப்பற்று
பொதுநலம் பேணுங் குறிக்கோளுக்காகவே 'தனவைசிய ஊழியர் சங்கம்' ஒன்று நிறுவப்பட்டது. சமுதாயச் சீர்கேடுகளை ஒழித்துக் கட்ட அரும்பாடு பட்டது இச்சங்கம். இச்சங்கம் முளைக்க முதற் காரணமாக விளங்கியவர் நம் சண்முகனார்.
தமிழறிஞர் சொ. முருகப்பனார் 'குமரன்' என்னும் இதழை நடத்தி வந்தார். அவ்விதழில், பல புனைபெயர்களில் சமுதாயக் கொடுமைகளைச் சாடி எழுதி வந்தார்.
'அஞ்சா நெஞ்சன்' என்னும் ஒரு பெயரும் அவர் பூண்டிருந்த புனை பெயர்களுள் ஒன்று. இப்பெயரில் எழுதும் கட்டுரைகள், உணர்ச்சியும் வேகமும் கொண்டு, காரசாரமாக வெளிவரும்.
இக்கட்டுரைகளைப் படித்துச் சுவைத்து, மகிழ்ந்து, அவற்றின் வயப்ப்டடு, இக்கட்டுரைகளை எழுதும் அஞ்சா நெஞ்சனைக் காண வேண்டும் என்று ஆவல் கொண்டார். ஆவலை நண்பர் ஒருவரிடம் எடுத்துரைத்தார். அதன் பயனாக அஞ்சாநெஞ்சனாகிய முருகப்ப னாரும் வயி.சு.சண்முகனாரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
முருகப்பரைச் சண்முகனார் பாராட்டி மகிழ்ந்து, சமுதாயச் சீர்திருத்தத்திற்காக ஓரமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறினார். இருவரும் கலந்து, சிந்தித்து, வயி.சு. சண்முகனார். சொ. முருகப்பனார், இராய. சொக்கலிங்கனார், பிச்சப்பா சுப்பிர மணியன், காந்தி மெய்யப்பச் செட்டியார், சிராவயல் காசிச் செட்டியார், அருணாசலம் செட்டியார் முதலாக எழுவர் கொண்ட தனவைசிய ஊழியர் சங்கத்தை உருவாக்கினர்.