102 சீர்திருத்தச் செம்மல்
வேண்டும் என்று கூறினார். இருவரும் கலந்து, சிந்தித்து, வயி.சு. சண்முகனார். சொ. முருகப்பனார், இராய. சொக்கலிங்கனார், பிச்சப்பா சுப்பிர மணியன், காந்தி மெய்யப்பச் செட்டியார், சிராவயல் காசிச் செட்டியார், அருணாசலம் செட்டியார் முதலாக எழுவர் கொண்ட தனவைசிய ஊழியர் சங்கத்தை உருவாக்கினர்.
சங்கம் ஆற்றிய தொண்டு
இச்சங்கம் செட்டி நாட்டில் அக்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இச்சங்கத்தின் சார்பில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றைக் குறிப்பிடுவது பொருத்த மாகும்.
நற்சாந்துபட்டி என்னும் ஊரில் நகரத்தார் மரபைச் சேர்ந்த முதியவர் ஒருவர், இளம் பெண்ணொருத்தியைத் திருமணஞ் செய்து கொள்ள ஏற்படாகியிருந்தது.
இச்செய்தி வயி.சு. சண்முகனார்க்கு எட்டியது. உடனே சங்கத்தின் சார்பில் ஊருக்கிருவராகச் சேர்ந்து, கூட்டமாகச் சென்று, மறியல் செய்து, அத்திருமணத்தைத் தடுத்து நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அம் முடிவின் படி கூட்டம் நற்சாற்றுபட்டிக்கும் படை யெடுத்தது. மணமகள் வீட்டின் முகப்பில் மறியலுக்காகக் கூட்டம் அமர்ந்து கொண்டது. மணமகன் வரவிடாமல் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு. கூட்டம் அமர விடாமற் செய்ய எண்ணிய அவ்வில்லத் தார் என்னென்ன இடையூறுகள் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து பார்த்தனர். கூட்டம் அசையவில்லை. மணமகள் வீட்டார் இதையறிந்து, தந்திரமாகக் கொல்லைப்புற வழியாக ஆரவார மின்றிச் சென்று திருமணத்தை முடித்து விட்டனர்.