104 சீர்திருத்தச் செம்மல்
நேர்மையானவற்றில் தான் அவ்வாறு விடாப் பிடியாக இருப்பார். அதனால் எவ்வளவு ஊறுகள் நேரினும் அசைந்து கொடார். இக் கொள்கையினால் பல இழப்புகள் நேர்ந்தன. நேர்ந்தும் இறுதி வரை உறுதியோடு தான் வாழ்ந்தார்.
வளர்ப்புமுறை
மக்களை வளர்க்கும் முறை, மற்றவரினும் வேறுபட்டிருக்கும். அன்பு காட்டுவார்; அப்பொழுது அன்னையாக இருப்பார். கண்டித்துரைப்பார்; அப்பொழுது தந்தையாக விளங்குவார். அறிவுரை கூறுவார்; அப்பொழுது நன்னெறி மொழியும் ஆசானாக மிளிர்வார். கட்டுப்பாட்டை வற்புறுத்துவார்; அப்பொழுது படைத்தலைவராகத் தோற்றம் அளிப்பார். 'இதை இவ்வாறு செய்யலாமா? அவ்வாறு செய்யலாமா?' என்று கலந்துரையாடுவார். அப்பொழுது தோழராக விளங்குவார்.
கட்டுப்பாடு, ஒழுங்கு, நேர்மை, உண்மை, பகுத்தறிவு, சிந்திக்கும் ஆற்றல், உதவும் பண்பு, பணிவு, பெருமிதம் இவ்வரும் பெருங் குணங்களை இவரால் வளர்க்கப்பட்ட குழந்தைகளிடமும் காணலாம். அவர்கள் பெரியவர்களாகிக் குடும்பப் பொறுப்பேற்ற பின்னரும் இன்றுங் காணலாம்.
திறந்த மனம்
மனத்திற் பட்டதை ஒளிவு மறைவின்றிப் பேசுவார். சுற்றி வளைத்துப் பேச மாட்டார்... நேரடியாகப் 'பட்'டென்று கூறும் இயல்பு இவரிடம் உண்டு. இச்சமுகத்தினர், எதனையும் வெளிப் படையாகப் பேசி விட