பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/134

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

124

முதலியவர்கள் தீர்மானித்தப்படி திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது.

இந்தக் குருகுலம் எப்படி நடக்கிறது என்று பார்ப்பதற்காக நானும் திருமதி நீலாவதி அவர்களும் 1931-ம் வருடம் சேரன் மாதேவி சென்று பார்த்து வந்தோம். உயர் சாதிப் பையன் களுக்கு ஒரு அறையிலும் மற்ற பையன்களுக்கு ஒரு அறையிலும் உணவு பரிமாறப்பட்டது கண்டு காந்தீய முறை குருகுலம் இப்படியா! என்று மனம் வருந்தினோம்.

ஒப்பற்ற தேசபக்தர் வ.வே.சு. ஐயர் தூய்மை மனம் படைத்தவர் தான். குருகுலம் நிர்வகித்தவர் வைதீக மனம் படைத்த மகா தேவய்யர் என்பவர். இதனால் இந்த இழிநிலை ஏற்பட்டது மட்டுமல்ல இதற்கு ஒரு போராட்டமே நடை பெற்றது. இச்சம்ப வந்தான் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் பிராமண எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்கக் காரணம் ஆகும் எனலாம்.

வை.சு.ச. அவர்கள் புதுவை பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகியவர். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட வை.சு.ச. பாரதி தாசனுக்குப் பல ஆண்டுகளாக மிகுந்த ஆதரவு காட்டி வந்திருக் கிறார்கள். தனவணிக நாட்டில் 50 ஆண்டுகளாகச் சீர்திருத்தம் மங்கிப் போனதற்குக் காரணம் வை.சு.ச., சொ. முருகப்பா, ராய. சொ., பிச்சப்பா சுப்பிரமணியம் போன்றவர்கள் இல்லாததே என்று துணிந்து கூறலாம்.