இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
13 செட்டிநாட்டின் வீரத் திலகம்
முல்லை பிஎல். முத்தையா
(பாவேந்தர் பாரதிதாசனைத் தெரிந்தோர் அனைவரும் முல்லை. முத்தையாவை அறிந்திருப்பர். சண்முகனாரிடம் நெருங்கிப் பழகியவர். அப் பழக்கத்திற் கண்டெடுத்த முத்துகளைக் கோத்துக் கொடுத் துள்ளார் முத்து ஐயா.)
மகாகவி பாரதியார், 'செட்டிமக்கள் குல விளக்கு' என்ற தலைப்பில், 1919ல் வை.சு. அவர்களைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
அந்தப் பாடலின் இறுதியில், 'சண்முகனாம் கருணைக் கோவே!' என்று முடிக்கின்றார்.
அதைவிட வை.சு. அவர்களுக்கு வேறு புகழ் உண்டோ?
பாரதியை ஆதரித்த வள்ளல் அல்லவா வை.சு. அவர்கள்!
என் மனநிறைவுக்காக, மலருக்குச் சிலவற்றை எழுதுவது என் கடமை!
1943ல் வை.சு. அவர்களுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அப்போது எனக்கு வயது 23, ஆயினும்,