132 சீர்திருத்தச் செம்மல்
தேவகோட்டை வழக்கறிஞர் இல்லத்துக்கு வை.சு. உடன் நானும் சென்றேன்.
"நீதி மன்றத்தில் இன்றைய விசாரணையில் வை.சு! நீங்கள்... இவ்வாறு சொல்ல வேண்டும்" என்றார் வழக்கறிஞர்.
"உண்மைக்குப் புறம்பாக ஒரு வார்த்தையும் கூற மாட்டேன்" என்றார் வை.சு.
பெருந்தொகைக்கான வழக்கு அது! எதிரிக்கு வசதியும் செல்வாக்கும் மிகுதி.
சூழ்ச்சியினால், பெருந்தொகையை வை.சு. இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டதை நினைத்துக் கண்ணீர் வடித்ததைத் தவிர வேறு வழி?
ஆனால், மன்னரான வை.சு. கலங்கவில்லை. நிலை குலைய வில்லை!
வை.சு. அவர்கள் தம் வாழ்க்கைச் சரிதத்தை எழுதி யிருந்தால், எவ்வளவோ உண்மைகள் தெரிய வந்திருக்குமே!
நீங்கள் சொல்லுங்கள் நான் எழுதுகிறேன் என்று பல முறை வற்புறுத்திக் கொண்டிருந்தேன். அது பயனற்றுப் போயிற்று.
வை.சு. அவர்கள் தந்தை என்றால், மஞ்சுளா அம்மையார் தாயாக விளங்கினார்.
வை.சு.வின் உள்ளத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந் தார்கள்!
இன்முகம் காட்டி வரவேற்று உபசரித்ததைத் தவிர, எவரிடமும் எந்த வேளையிலும்,