135
உழைத்திட நான் தவறேன்' என முழங்கிய பாவேந்தர் பாரதிதாசன்.
சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் தலைசிறந்த தலைவரும் சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவரும் ஆன பெரியார் ஈ.வே.ரா., போன்ற பெருமக்களை யெல்லாம் வரவேற்று, அவர்களுடைய கொள்கைகளையும் சான்றாண் மையையும் ஏற்று அவர்களுடைய அன்பையும் நட்பையும் பெற்று விளங்கியவர் வை.சு.ச. அவர்கள்.
காங்கிரசுப் பேரியக்கத்திலும் பின்னர்ப் பொது வுடைமைக் கட்சியிலும் சேர்ந்து, பொது வாழ்வில் தம்மை மெழுகாக்கிக் கொண்ட ப. ஜீவானந்தம் அவர்கள் இறுதிக் காலம் வரை வை. சு.சண்முகனாரின் நட்பில் திளைத்தார். பழந்தமிழ் இலக்கிய நூல் களைக் கட்சிக்காக ஜீவா அவர் களிடம் வை.சு. வழங்கினார்.
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனாரின் வரலாற்றை எழுதிய தேச பக்தரும் 'லோகோபகாரி' பத்திரிகையின் ஆசிரியருமான பரலி. சு. நெல்லையப்பர், வை.சு.வின் நெருங்கிய நண்பர்.
தமிழ்ப்பணி
'பைந்தமிழ்த் தேர்ப்பாகன்' பாரதியின் பாடல் உரிமைகளை வாங்கியிருந்த தொழிலதிபர் ஏவி. மெய்யப்பனாரிடம், 'பாரதியின் பாடல்களைப் பொதுச் சொத்தாக்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டதை மதித்துப் பாரதியார் பாடல் களை நாட்டின் பொதுச் சொத்தாக்கிப் புகழ் பெற்றார் மெய்யப்பனார்.'
"தமிழகத்துக்கு நற்கால உதயம்! தமிழ் நாட்டில் தமிழிசையை எதிர்ப்போரும் உண்டா?" என்ற