பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/149

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 139

குள் தகராறு வந்து விட்டது. யாரோ, எப்போதோ சொன்னது சடாரென்று நினைவுக்கு வர, நல்லதுக்குக் காலமில்லை என்று சொல்லிவிட்டேன்.

அந்த இடத்திற்குத் தற்செயலாக வந்த ஐயா, ‘நல்லதுக்குக் காலமில்லையா? யார் சொன்னது?’ என்று கேட்டுவிட்டு நடந்ததை விசாரித்தார். உடனே ‘நல்லோர் பெரியோர் என்றெண்ணும் காலம் வந்ததே - கெட்ட -நயவஞ்சகக் காரருக்கு நாசம் வந்ததே’ என்ற பாரதியின் பாடல் வரிகளை, என்னைப் பல தடவை (Imposition) எழுதச் செய்தார்கள்.

ஐயா அவர்கள், இன்னல்களை இன்முகத்துடன் ஏற்றிருந்த போது, என்னிடம் ஆழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்ற குறள் பற்றிப் பேச்சு எழுந்தது.

நான் டாக்டர் மு.வ. எழுதிய ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ என்ற நூலிற் படித்த ‘பொருளில்லார் இவ்வுலகில் இல்லை’ என்பதைப் பற்றி எடுத்துச் சொன்னேன்.அடடா! அப்படி ஒரு நிலை நாட்டில் ஏற்பட்டு விட்டால் எப்படியிருக்கும்!’ என்று மிக வியந்து மகிழ்ந்தார்கள் ஐயா.

குழந்தைகளாகிய எங்களைப் பாசத்துடனும் அதே நேரத்தில் கண்டிப்புடனும் வளர்த்தார்கள். பாரதியார், பாரதிதாசனார் பாடல்களை நாள் தோறும் எங்களைப் பாடச் சொல்வார்கள்.

1947 இல் கானாடுகாத்தான் கொரட்டியார் ஊருணி அருகில் அமைந்திருந்த பள்ளியில் முதல் சுதந்திர தின