142 சீர்திருத்தச் செம்மல்
கொண்டு, சிங்கப்பூர், மலேசியாவில் தாமே நீதிமன்றங்களில் வாதாடினார்கள். அவரின் வாதத்திறமையை வழக்கறிஞர்களே பாராட்டினார்கள். வேலைக்கும் போய்க் கொண்டு இதனைச் செய்தார்கள். அவர்கள் திறமை - கடுமையான உழைப்பு - தைரியம் வேறு யாருக்கும் வராது. அவர்கள் பட்ட கஷ்டங்கள் பலனாகும் போது அவர்கள் இல்லை.
கமலாவை நான் திருமணம் செய்து கொண்ட அன்று என்னிடம் கமலாவை நன்கு வைத்துக் கொள்ள வேண்டு மென்று காரண காரியங்களோடு உருக்கமாகக் கூறினார்கள். எங்களின் நல்ல இல்லற வாழ்க்கைக்கு அந்த அறிவுரைகளே அஸ்திவாரமாக அமைந்தன. அய்யாவின் வளர்ப்பு, அம்மானைச் சிறந்த மனிதனாக ஆக்கியது.
அவர்களின் மகள் பார்வதி ஆச்சி அவர்களின் திருமணத்தை அந்தக் காலத்திலேயே பி.டி. ராசன் அவர்கள் தலைமையில் சீர்திருத்த முறையில் நடத்தினார்கள். திருமதி. பார்வதி நடராசன் அவர்கள் எதையும் சிந்தித்துச் செயலாற்றம் தன்மை கொண்டவர்கள். என் மைத்துனர் ராஜா. சண்முகம் அவர்கள் சிங்கப்பூர், மலேசியா சென்றபோது அவர்களுக்குத் துணையாக இருந்து, வந்த கஷ்டங் களையெல்லாம் சமாளித்து இருவரும் வெற்றி பெற்றார்கள். இந்த மன தைரியத்துக் கெல்லாம் அய்யாவின் துணிச்சலான வளர்ப்பு முறையே காரணம்.
எங்கள் வீட்டில் சில நாள்கள் வந்து தங்கியிருந்தார்கள். அதுவும் நாங்கள் திருமணம் செய்து கொண்ட புதிதில் அவர்களின் அறிவுரை களும் வாழ்க்கை முறைகளும் எங்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்தன.