இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
16 "எங்கள் குல விளக்கு"
கமலா முத்துராமன்
(சண்முகனார்க்கு மகன் வழிப் பேர்த்தி கமலா. தாமறிந்தவற்றைச் சுருக்கமாக நமக்குத் தருகிறார்.)
ஐயா வை.சு. சண்முகம் அவர்கள் அக்காலத்தில் இராமநாத புர மாவட்டக் காங்கிரசுத் தலைவராகவும் அனைத்து இந்திய காங்கிரசுக் கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்து தேசத் தொண்டு செய்தார்கள். யோகி சுத்தானந்த பாரதியாரின் வளர்ச்சிக்குத் துணையாக இருந்தார்கள்.
பிற்காலத்தில் தாவர இயலில் பேரறிஞராகத் திகழ்ந்த மயூர நாதன் அவர்கள் படிப்பதற்கு வை.சு. உதவி செய்தார்கள். அந்த அறிஞர் வை.சு.விடம் கடைசிவரை மதிப்பும் நன்றியும் செலுத்தினார்கள் என்று ஐயா சொல்வார்கள்.
"நன்றே நினைமின் நமனில்லை"
என்ற திருமூலர் வாக்கை அடிக்கடி சொல்வார்கள்.
குழந்தைகளிடத்தில் ஐயா வை. சு. வுக்கு மிகவும் பாசம் உண்டு. குழந்தைகளாயினும் அதிகாலையில்