பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/163

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 153

எங்கள் ஐயா அவர்கட்கு எவ்வளவோ செல்வமும், சொத்து களும் இருந்தன. அவர்களின் தீவிர, பிரதிபலன் எதிர் பார்க்காத நாட்டுப்பற்றால் ஏகப்பட்ட செல்வத்தைச் செலவு செய்தார்கள். எஞ்சிய செல்வத்தை நியாயமான உரிமைக்காக நீதி மன்றங்களிலும் செலவிட்டார்கள். மேலும் எவ்வளவோ நல்ல காரியங்கட்கும், கஷ்டத்திலுள்ள நண்பர்கட்கும் உதவி செய்தார்கள்.

"இன்ப மாளிகை" மட்டும் மீதி இருந்தது. அந்த நிலை யிலும் எந்தப் பழம் வந்தாலும் எங்களுக்காகக் கூடையோடு தான்வாங்கப்படும். எங்களோடு வீதிப் பிள்ளைகளுக்கும் தெவிட்டும் மட்டும் கொடுக்கப்படும். பலூனா, பொம்மை களா, சிலேட்டு களா, நோட்டா, பென்சிலா எல்லாம் மொத்த மாக வாங்கப்படும். எங்களுக்கும் ஊர்ப் பிள்ளைகட்கும் விநியோகிக்கப்படும்.

எங்கள் கண் எதிரே எங்களின் ஐயா அவர்கள், ஊரில் தேள் கொட்டப்பட்டு வந்தவர்களையும் பாம்புக் கடிபட்டு வந்தவர் களையும் காப்பாற்றியுள்ளார். யார் கவலைப்பட்டு, துன்பப் பட்டு வந்தாலும் அவர்கள் ஆபத்து, சங்கடங்கள் விலகும். நன்றியோடு விடை பெறுவார்கள். எவ்வளவோ நல்ல காரியங் களைச் செய்துள் ளார்கள் எங்கள் ஐயா.

எங்கள் ஐயா அவர்களின் தோற்றமும், பேச்சும் கம்பீரமாக இருக்கும். அந்த உண்மையான தேஜசான, கூர்மையான, கனிவான, நேர்மையான, தைரியமான கண்கள் தனித்தன்மை வாய்ந்தன. அவர்களின் முகத்தை நேருக்கு நேர் நோக்கும் தைரியம் யாருக்கும் வராது. இதற்கு ஒரு உதாரணம், எங்கள் ஐயா அவர்கள் எங்கள்