பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/164

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

154 சீர்திருத்தச் செம்மல்

ஆயாள் அவர்களையும், என் தயார் அவர்களையும், என்னையும் (நான் சிறு பிள்ளை 3 அல்லது 4 வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்) அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரிக்குக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் வீட்டிற்குச் சென்றார்கள். இரயில் பயணம்.

அப்போது பாண்டிச்சேரி பிரான்சு ஆட்சியிலிருந்தது. அதனால் பயணிகளைச் சோதனை செய்து சுங்கவரி விதிப்பது செயல்பட்ட காலம். பாவேந்தர் வீட்டில் தங்கி இருந்தோம். எங்கள் ஐயாவும், பாவேந்தரும் பேசிக் கொண்டிருக்க, நான் என் தாயார் பாவேந்தரின் துணைவியார், அவர்களின் புதல்விகள் அனைவரும் பாண்டிச் சேரியைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம்.

பல தினங்கள் சென்று கானாடுகாத்தானுக்குத் திரும்பினோம். பாண்டிச்சேரியிலிருந்து ரயிலில் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள், இரயில் நின்றது. சுங்கச்சாவடி சோதனை அதிகாரிகள் மற்ற எல்லாரையும், அவர்களின் பொருள்களையும் சோதனை செய்தனர். ஆனால் அவர்கள், எங்கள் ஐயா அவர்களைப் பார்த்தவுடன் எந்தச் சோதனையும் செய்யாமல், மரியாதை கலந்த மென்மையான சிரிப்பை, எங்கள் ஐயாவுக்குக் காணிக்கை ஆக்கிவிட்டு, மிடுக்குடன் மற்ற பயணிகளைச் சோதனை செய்யப் போய் விட்டனர்.

அடுத்த ரயில் நிலையம் வந்த பின், எங்கள் ஐயா எப்போதும் வைத் திருக்கும் சின்ன வெள்ளி வெற்றிலைப் பெட்டியைத் திறந்து,

வெற்றிலை போட்டார்கள். அப்போது எங்கள் ஐயா, என் ஆயாள் அவர் களிடமும், என் தாயார் அவர்களிடமும், சொன்னார்கள், "தங்கம், வைரங்கள் இந்த டப்பாவில் எவ்வள வோ வைத்துக்