162 சீர்திருத்தச் செம்மல்
ஊக்கமளித்தனர். நகரத்தார் பெண்கள் ஆண் /பெண் இருவரும் சேர்ந்து படிக்கும் கல்லூரிக்கு - குறிப்பாக மருத்துவத்துறைக்குப் போகாமலிருந்த காலக்கட்டம், அச்சமயம் என் அருமை ஐயா அவர்கள் அளித்த ஊக்கமும், துணிச்சலும் ஆக்கபூர்வமாகக் கூறிய கருத்துகளும் என் மனத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்தன. "நீ ஐக்கிய நாடுகள் அவையின் தலைவராக உள்ள திருமதி விஜய லெட்சுமி பண்டிட்டைப் போல் வர வேண்டும்" என்று வாழ்த்தி அனுப்பியதைக் கண்களில் நீர் மறைக்க நினைவு கூர்கிறேன்.
தாரமிழந்த கணவருக்கும், தாலி இழந்த மங்கைக்கும் திருமணம் என மறுமணம் செய்து காட்டிய புரட்சியை எண்ணிப் பார்க்கிறேன். எந்த எதிர்ப்பிற்கும் அஞ்சாத நெஞ்சம் அந்த உயர்ந்த நெஞ்சம். எடுத்த இல்ட்சியம் கொள்கை தான் முடிவு. அந்தஇலக்கை அடையும் வரை ஐயா அவர்கள் அயர்ந்ததே இல்லை. அதற்காக ஐயா அவர்கள் உடல் அளவில் பொருள் அளவில் பட்டபாட்டை நான் நன்கு அறிவேன். என்னுடைய வாழ்க்கையில் சோதனைகள் வேதனைகள் வரும் போது ஐயா அவர்களை, திடமும் வலிமையும் அளிக்க மானசீக மாக வேண்டுவது என் அன்றாட நிகழ்ச்சி, தைரிய இலட்சுமியின் முழு உருவாக ஐயா அவர்களை - அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையை வைத்துக் கருதிப் போற்றி வணங்குகிறேன்.
ஐயா அவர்களிடம் மற்றவர் நம்மை துன்புறுத்துவதாக வருந்திக் கூறினால் "நாய் நம்மைக் கடித்தால் நாயை நாம் திருப்பியா கடிப்பது? நாம் விலகிச் செல்ல வேண்டும்" என்பார்கள். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், நெளிவு சுழிவு களில் மாட்டும் போது ஐயா