வை. சு. சண்முகனார் 171
திரு. ப. ஜீவானந்தம் போன்ற பல பெருமக்கள் கானாடு காத்தானில் எங்கள் தந்தையார் இல்லத்தில்தான் வந்து தங்குவார்கள். அப்பகுதிக்குப் பிரசாரத்துக்கு வரும் தலைவர்களைக் கூட்டி வரத் தஞ்சாவூர் அல்லது திருச்சி ரயில் நிலையத்துக்கு இவர்கள் கார் அனுப்பி வைக்கப்படும். ஏனெனில் அந்தக் காலத்தில் இப்பகுதிக்கு ரயில் கிடையாது. தந்தையாரின் சொந்தச் செலவில்தான் இவையெல்லாம் நடைபெறும். ஜீவானந்தம் தொடர்பு இப்பகுதிக்குப் பிரசாரத்துக்கு வந்த ஜீவானந்தம் ஐயா அவர்கள் வழக்கம் போலக் கானாடுகாத்தானுக்கு வந்திருந்தார்கள். அப்பொழுது எனக்குச் சுமார் 14 வயதிருக்கலாம். தந்தையாரும் அவரும் பல விஷயங் களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். சீவா ஐயா மிகச் சத்தமாகப் பேசினார்கள் (இதனால் இவர் தொண்டை, உடல்நிலை பாதிக்கப்படுவதினால்) அ த ன ல் தந்தையார் சீவா ஐயாவிடம் 'ஒரு அணாக் கொடுத் து வாங்கும் பொருளை ஒரு ரூபாய் கொடுத்து ஒருவன் வாங்கினால் அவனைப்பற்றி என்ன நினைப்பீர்கள்' என்று கேட்டார்கள். அதற்கு 'மதிப்புத் தெரியாதவன், முட்டாள் என்று நினைப்பேன்' என்று சீவா ஐயா கூற, தந்தையார் 'அப்படியானால் நாமிருவர் மட்டும் தானே இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறோம். பல நூறு பேர், ஆயிரம் பேர் கூடி இருக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுவது போல ஏன் இவ்வளவு சத்தம் போட்டுப் பேசுகிறீர்கள்? உங்கள் உடல் நலத்தை இது எத்தனை தரம் பாதித்து உள்ளது. கூட்டத்தில் பேசும் பொழுது இருமல், தொண்டைச் சிரமத்துடன் பேச வைத்து விடுகிறதல்லவா? இந்தப் பழக்கத்தை நிறுத்த