174 சீர்திருத்தச் செம்மல்
பத்திரிகையின் மூலமும், பிரசங்கங்கள் மூலமும் "முன்னேற்றம்" பத்திரிகை உரிமையாளர் திரு. கோவிந்தசாமி பிள்ளை அவர்களும் தந்தையாரவர்களும், திரு. கோ. சாரங்கபாணி ஐயா அவர்களும் இன்னும் சிலரும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் வீண் போக வில்லை. விதைத்த விதை மரமாகிப் பலன் தந்து வருகிறது.
எங்கள் தாயார்
எங்களின் தாயார் அவர்கள் அன்புள்ளம் கொண்டவர்கள். பெண்கள் எழுத்தறிவு பெறாத காலம். அவர்களின் 9-ஆவது வயதில் அவர்கட்குத் திருமணம் செய்யப்பட்டதாம். ஒரு சில மாதங்கள் தந்தையாரவர்கட்கு இளையவர்களாம். தந்தையார் அவர்கள் மனம் போலத்தான், எதையும் செய்வார்களாம். அவர்கள் சொல்லுக்கு மாறாக நடந்ததில்லையாம்.
அந்தக் காலத்தில் பெண்கள் ரவிக்கை அணிய மாட்டார் களாம். தந்தையார் சொற்படி ரவிக்கை அணிந்தார்களாம். கதராடை கட்டச் சொன்ன போது எந்தத் தயக்கமும், மறுப்பும் காட்டாது சந்தோஷத்துடன் கட்டிக் கொண்டார்கள். தந்தையாரவர்கள் கார் ஓட்டும் போது அருகில் முன் சீட்டில் உட்காரச் சொன்னபடி உட்கார்ந்து செல்வார்களாம். இதைப் பார்த்து ஆச்சிமார்கள் எல்லாம் கேலி செய்வார்களாம். தாயார் அவர்கள் இதைப் பொருட்படுத்தியதில்லை.
இதே போல் அந்தக் காலத்தில் பெண்கள் கணவருடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இவர்கள் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஒரு சமயம் வீட்டுக்கு வந்திருந்த சகோதரிகளை கொழுந்திமார்களை ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்