பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/188

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

178 சீர்திருத்தச் செம்மல்

5.சாவுக்கும் துணிந்துவிட்ட நான் என் வாழ்வில் நேரும், எந்த நிகழ்ச்சிகளைக் கண்டும் ஆணவமுறவும், பயப்படவும் காரணமே இல்லை.

6.அரசாங்கமே எனது வசப்படினும் ஆணவமுறேன். அவயவங்கள் இழக்கப்படினும் கவலையுறேன். உயிர் போயினும் உத்ஸாகம் குன்றேன்.

7.எனது தவற்றை எனக்கு எடுத்துக்காட்டுவோரிடம் நன்றி செலுத்துவேன். வீணாகத் தூற்றுவோரைக் கண்டு இரக்கம் கொள்ளுவேன்.

8.மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்காதவர்களுக்கு அச்சமும், சோர்வும் அவமானமும் வரா. மனச்சாட்சிக்குத் தொண்டு செய்யும் அடிமையாகி விட வேண்டும்.

9.சோம்பல் அழிக, கவலை ஒழிக. அச்சம் அடியோடு மாய்க.

10.அன்பு பெருகி, அறிவு வளர எப்பொழுதும் முயல வேண்டும்!

இதை ஒவ்வொன்றாகத் தந்தையாரவர்கள் கூற நாங்கள் மூவரும் அதை அப்படியே திரும்பக் கூறுவோம். கூறி முடித்த வுடன் அவரவர்கள் வேலையைக் கவனிக்கச் சென்று விடுவோம். சில மாதங்கள் தான் இது நடந்தது. பிறகு தந்தையார் சிங்கப்பூர் சென்று விட்டார்கள். அண்ணன் படிக்க கொழும்பு சென்று விட்டார்கள். என்னைச் சென்னைக் கான்வென்ட் பள்ளியில் சேர்த்து விட்டார்கள்.

பிற்காலத்தில் எங்களின் பிள்ளைகளும் பிற பிள்ளைகளு மாக 8 முதல் 10 பேர் தாயார் வீட்டில் இருப்பார்கள். அந்தப் பிள்ளைகள் பகலுணவு சாப்பிட உட்கார்ந்த