பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/189

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 179

வுடன் பாரதியார், அல்லது பாரதிதாசன் பாடல்களில் ஏதாவது ஒரு முழுப் பாடலைப் பாடி விட்டுத் தான் உணவில் கை வைக்கவேண்டும். தந்தையார்காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவார்கள். நாங்கள் 5.30 மணி சுமாருக்கு எல்லாரும் எழுந்து விடவேண்டும். எழுப்பினவுடன் எந்தக் குழந்தை ஒரு மாதத்தில் அதிக நாள் முதலில் எழுந்து விடுகிறதோ அதற்கு ஒரு பரிசுப் பொருள் கொடுப்பார்கள். பிள்ளைகளின் படுக்கையின் அருகில் வந்து "ஒன்று, இரண்டு, மூன்று" என்று கூறிக் கையினால் மூன்று முறை தட்டிச் சப்தம் எழுப்புவார்கள். குழந்தைகள் நான் முந்தி, நீ முந்தி என்று எழுந்து விடுவார்கள், "பள்ளியில் இன்ன பிள்ளை என்னை அடித்து விட்டது" என்று ஒரு பிள்ளை அழுது கொண்டு தந்தையாரிடம் வந்து சொன்னது. இதைக் கேட்டு இவர்கள் கோபம் உற்றார்கள். "அடிபட்டேன் என்று வெட்க மில்லாது வந்து கூறுகிறாயே. திருப்பிக் கொடுக்க வேண்டியது தானே, நீ அடிபடத்தான் லாயக்கு" என்று கூறிப் பிள்ளையைக் கண்டித்துத் தைரியமூட்டினார்கள்.

எனது திருமணம்

அவர்களின் புதல்விக்கு (எனக்கு) திருமணம் பேசினார்கள். ஆர்வமுடன் செய்து கொள்ள வரன் வீட்டார் சம்மதம் தெரிவிப் பார்கள். தந்தையாரவர்கள் "திருமணம் புரோகிதர் இன்றிச் சீர்திருத்த முறையில் நடைபெற வேண்டும். பெண்ணும் மாப் பிள்ளையும் மணையில் உட்காருவது கூடாது. மற்ற வைதீகச் சடங்குகள் ஏதும் இன்றிக் குறிச்சிகளில் உட்கார்ந்து சங்கிலிகள், மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணம் நடைபெற வேண்டும். திருமணத்தைப் பதிவு செய்துவிட